மாநில செய்திகள்

சென்னை விமான நிலையம் புதுப்பிக்கும் பணி: காமராஜர், அண்ணா பெயர் பலகைகள் வைக்கப்படும் வைகோவுக்கு, மத்திய மந்திரி பதில் + "||" + Chennai Airport renovation work Kamarajar, To Vaiko, where Anna's name plates are placed, The Union Minister replied

சென்னை விமான நிலையம் புதுப்பிக்கும் பணி: காமராஜர், அண்ணா பெயர் பலகைகள் வைக்கப்படும் வைகோவுக்கு, மத்திய மந்திரி பதில்

சென்னை விமான நிலையம் புதுப்பிக்கும் பணி: காமராஜர், அண்ணா பெயர் பலகைகள் வைக்கப்படும் வைகோவுக்கு, மத்திய மந்திரி பதில்
சென்னை விமான நிலையம் புதுப்பிக்கும் பணி முடிந்ததும் காமராஜர், அண்ணா பெயர் பலகைகள் வைக்கப்படும் வைகோவுக்கு, மத்திய மந்திரி பதில்.
சென்னை, 

டெல்லியில் மத்திய விமான போக்குவரத்துத்துறை மந்திரி ஜோதிர் ஆதித்ய சிந்தியாவை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கடந்தவாரம் சந்தித்து பேசியபோது, சென்னை விமான நிலையத்தில் இருந்து அகற்றப்பட்ட, அண்ணா, காமராஜர் பெயர்ப்பலகைகளை மீண்டும் அதே இடங்களில் வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோரிக்கை மனு கொடுத்திருந்தார்.

இதற்கு ஜோதிர் ஆதித்யா சிந்தியா விளக்கம் அளித்து வைகோவிற்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

“சென்னை விமான நிலையத்தைப் புதுப்பிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்றவுடன், காமராஜர் உள்நாட்டு முனையம் என்ற பெயர்ப்பலகை மீண்டும் பொருத்தப்படும். அதேபோல், கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்றவுடன், அண்ணா பன்னாட்டு முனையம் என்ற பெயர்ப்பலகையும் மீண்டும் அதே இடத்தில் பொருத்தப்படும் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் பா.ஜ.க. சார்பில் கால்பந்து போட்டி
தமிழக பா.ஜ.க. சார்பில், பிரதமர் நரேந்திரமோடி பிறந்தநாள் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக பா.ஜ.க. தென்சென்னை மாவட்டம் சார்பில், சென்னை பட்டினப்பாக்கத்தில் கால்பந்து போட்டி நடத்தப்பட்டது.
2. சென்னையில் 1,600 இடங்களில் இன்று மெகா தடுப்பூசி முகாம்
சென்னையில் இன்று 1,600 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது என்றும், ஒரு மாதத்திற்குள் சென்னையில் உள்ள 18 வயது நிரம்பிய அனைவருக்கும் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாகவும் மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தார்.
3. சென்னையில் முககவசம் அணியாத 1,163 பேர் மீது வழக்கு
கொரோனா 3-வது அலையை தடுக்கும் நடவடிக்கையாக முககவசம் அணியாதவர்கள் மீது அபராத நடவடிக்கை மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
4. சென்னை: நிலம் கையகப்படுத்துவதற்கு எதிரான வழக்கு - ஐகோர்ட்டில் தள்ளுபடி
வெளிவட்ட சாலை அமைப்பதற்கு நிலத்தை கையகப்படுத்துவதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.
5. ஊடகங்களை கண்காணிக்கும் மத்திய அரசின் புதிய தொழில்நுட்ப விதிக்கு தடை
ஊடகங்களை கண்காணிக்கும் மத்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப விதியில் ஒரு உட்பிரிவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.