மாநில செய்திகள்

நகைச்சுவை நடிகர் வடிவேலு பாணியில் வாய்க்கால்களை காணவில்லை என விவசாயிகள் போலீசில் புகார் + "||" + Comedian Vadivelu style The drains are missing Farmers complain to police

நகைச்சுவை நடிகர் வடிவேலு பாணியில் வாய்க்கால்களை காணவில்லை என விவசாயிகள் போலீசில் புகார்

நகைச்சுவை நடிகர் வடிவேலு பாணியில் வாய்க்கால்களை காணவில்லை என விவசாயிகள் போலீசில் புகார்
வேடசந்தூர் குடகனாறு பாதுகாப்பு சங்க தலைவர் டி.ராமசாமி தலைமையிலான விவசாயிகள், வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் நேற்று ஒரு புகார் மனு கொடுத்தனர்.
திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் குடகனாறு பாதுகாப்பு சங்க தலைவர் டி.ராமசாமி தலைமையிலான விவசாயிகள், வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் நேற்று ஒரு புகார் மனு கொடுத்தனர். அதில் வேடசந்தூர் அருகே கிரியம்பட்டியில், குடகனாற்றுக்கு குறுக்கே உள்ள வெங்கட்டராமன் அய்யங்கார் அணைக்கட்டில் இருந்து செல்லும் பாசன வாய்க்கால் மற்றும் லட்சுமணம்பட்டி அணைக்கட்டில் இருந்து செல்லும் இடதுபுற பாசன வாய்க்கால்கள் ஆக்கிரமிப்புகளால் காணாமல் போய் விட்டன. இதுகுறித்து பொதுப்பணித்துறை, நீர்வள ஆதாரத்துறையினரிடம் பலமுறை புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே வாய்க்கால்களை கண்டுபிடித்து தர வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். நகைச்சுவை நடிகர் வடிவேலு நடித்த சினிமா படத்தில், கிணற்றை காணவில்லை என்று போலீசில் புகார் கொடுக்கும் காமெடி காட்சியில் வருவதை போன்று, வாய்க்கால்களை காணவில்லை என்று விவசாயிகள் போலீசில் புகார் அளித்த சம்பவம் வேடசந்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.