மாநில செய்திகள்

சென்னையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.168 உயர்வு + "||" + Gold price rises by Rs.168 per sovereign in Chennai

சென்னையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.168 உயர்வு

சென்னையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.168 உயர்வு
சென்னையில் தங்கம் விலை நேற்றைய விலையுடன் பவுனுக்கு ரூ.168 அதிகரித்து ரூ.36,496க்கு விற்பனை செய்யப்படுகிறது.சென்னை,

சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது.  இந்த நிலையில், சென்னையில் கடந்த 2 நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

சென்னையில் நேற்று, தங்கத்தின் விலை முந்தின நாள் விலையுடன் ஒப்பிடும்பொழுது கிராம் ஒன்றுக்கு ரூ.23 உயர்ந்து ரூ.4,530க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதேபோன்று பவுனுக்கு ரூ.184 உயர்ந்து ரூ.36 ஆயிரத்து 240க்கு விற்பனையானது.  24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.39 ஆயிரத்து 152க்கு விற்பனையானது.

எனினும், வெள்ளியின் விலை 1 ரூபாய் குறைந்து கிராமுக்கு ரூ.72.20-க்கு விற்பனையானது. அதேபோல 1 கிலோ வெள்ளியின் விலை ரூ.72 ஆயிரத்து 200 ஆக இருந்தது.

இந்நிலையில், சென்னையில் தங்கம் விலை நேற்றைய நாளின் இறுதி விலையுடன் ஒப்பிடும்போது, ஒரு கிராம் விலை ரூ.21 உயர்ந்து ரூ.4,562க்கு இன்று விற்பனை செய்யப்படுகிறது.  பவுனுக்கு ரூ.168 அதிகரித்து ரூ.36,496க்கு விற்பனை செய்யப்படுகிறது.  சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.73.20க்கு விற்பனையாகிறது.
தொடர்புடைய செய்திகள்

1. உத்தரகாண்ட்: கனமழைக்கு 64 பேர் பலி, 11 பேர் மாயம்; அமித்ஷா பேட்டி
உத்தரகாண்டில் பெய்து வரும் கனமழைக்கு பலி 64 ஆக உயர்ந்து உள்ளது என ஆய்வு மேற்கொண்ட உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளார்.
2. சென்னையில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வு...
பெட்ரோல், டீசல் விலை தொடர்ச்சியாக அதிகரித்து கொண்டே வருகிறது.
3. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது.
4. உத்தரகாண்ட் கனமழை உயிரிழப்பு; 34 ஆக உயர்வு
உத்தரகாண்டில் பெய்து வரும் கனமழைக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்து உள்ளது.
5. சென்னையில் கொரோனா பாதிப்பு; இன்று 156 ஆக உயர்வு
சென்னையில் கொரோனா பாதிப்பு நேற்றுடன் ஒப்பிடும்போது, இன்று 156 ஆக உயர்ந்து உள்ளது.