டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் 136வது பிறந்தநாள்; முதல்-அமைச்சர் வாழ்த்து


டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் 136வது பிறந்தநாள்; முதல்-அமைச்சர் வாழ்த்து
x
தினத்தந்தி 30 July 2021 7:32 AM GMT (Updated: 30 July 2021 7:32 AM GMT)

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் 136வது பிறந்த நாளுக்கு முதல்-அமைச்சர் ஸ்டாலின் வாழ்த்துகள் தெரிவித்து உள்ளார்.

சென்னை,

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் 136வது பிறந்த நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.  அவரது தாயார் சந்திரம்மாள் நோயால் மிகவும் அவதிப்பட்டு இறந்து போனார். இதை நேரில் பார்த்த முத்துலட்சுமி ரெட்டி மருத்துவராக வேண்டும் என்ற வைராக்கியத்தில் 1907ம் ஆண்டு சென்னை மருத்துவ கல்லூரியில் சேர்ந்து பயின்றார்.

இவர் படிப்பில் சிறந்து விளங்கியது மட்டுமின்றி சிறப்பு சான்றிதழும், தங்க பதக்கங்களும் பெற்றுள்ளார். 1912ம் ஆண்டு தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர் என்ற பெருமையை பெற்றார்.

இந்நிலையில், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் 136வது பிறந்த நாளுக்கு முதல்-அமைச்சர் ஸ்டாலின் இன்று வாழ்த்துகள் தெரிவித்து உள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், 'பிற்போக்குத்தனங்களும் பெண்ணடிமைத்தனமும் முடைநாற்றம் வீசிக் கொண்டிருந்த காலத்தில் புரட்சிக்கனலாய் வாழ்ந்த இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினரான மருத்துவர் முத்துலட்சுமி அம்மையாரின் 136-வது பிறந்தநாள்! பெண்கள் அனைத்து உரிமைகளோடும் வாழ பாலினச் சமத்துவமிக்க சமுதாயம் படைப்போம்!' என பதிவிட்டுள்ளார்.


Next Story