மாநில செய்திகள்

தமிழகத்தில் ஏற்கனவே உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை நீட்டிப்பு + "||" + Lockdown extended in one more week in Tamil nadu

தமிழகத்தில் ஏற்கனவே உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை நீட்டிப்பு

தமிழகத்தில் ஏற்கனவே உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை நீட்டிப்பு
தமிழகத்தில் நாளையுடன் ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில், 9ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை,

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள் இன்றி ஊரடங்கு மேலும் ஒரு வாரம்  அதாவது ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு மேலும் கூறியிருப்பதாவது:- 

*கட்டாயமாக உடல் வெப்ப நிலை பரிசோதனையை வாடிக்கையாளர்களுக்கு வணிக நிறுவனங்கள் செய்ய வேண்டும்.  

*அதிக அளவில் கூட்டம் கூடும் பகுதி அடையாளம் காணப்பட்டால் அந்த பகுதியை மூட மாவட்ட ஆட்சியர் முடிவு செய்யலாம். 

*அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் வாடிக்கையாளர்களைஅனுமதிக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை 

*விதிமுறைகளை கண்டிப்புடன் நடைமுறைப்படுத்த ஆட்சியர்கள், காவல்துறைக்கு முதல்வர் அறிவுறுத்தல் 

*நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட வேண்டும் 

*கொரோனா கண்டறிதல்,சிகிச்சை, தடுப்பூசி ஆகிய பணிகள் கண்டிப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும். 

*வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்ற நோக்கில் வழங்கப்பட்ட தளர்வுகளை தவறாக பயன்படுத்தினால் பெரும் பாதிப்பு உருவாகும். 

*3-வது அலையை தடுக்க பொதுமக்கள் கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

2. பெரம்பலூர் மாவட்ட பகுதிகளில் 16-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு
பெரம்பலூர், அரும்பாவூர், லெப்பைக்குடிகாடு ஆகிய பகுதிகளில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு வருகிற 16-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
3. ஊரடங்கு நீட்டிப்பு: செப்டம்பர் 1ந்தேதி முதல் பள்ளிகள் திறக்க உத்தேசம்; மத வழிபாட்டுக்கு தடை
தமிழகத்தில் செப்டம்பர் 1ந்தேதி முதல் 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க உத்தேசிக்கப்பட்டு உள்ளது.
4. தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
5. ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை
ஊரடங்கை நீட்டிப்பது, கூடுதல் தளர்வுகள் வழங்குவது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.