மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் 2 ஆயிரத்தை நெருங்குகிறது + "||" + TN covid 19 updates on july 30

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் 2 ஆயிரத்தை நெருங்குகிறது

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும்  2 ஆயிரத்தை நெருங்குகிறது
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,947- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை,

தமிழகத்தில் கடந்த 68 நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், நேற்று தொற்று பாதிப்பு சற்று அதிகரித்தது. இந்த நிலையில், 2-வது நாளாக இன்றும் தொற்று பாதிப்பு உயர்ந்துள்ளது. மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட தகவலின் படி, தமிழகத்தில் இன்று 1,947- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

 இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 25,27,611- ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து இன்று 2,193- பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனா தொற்றால் இன்று மட்டும் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.  தொற்று பாதிப்பைக் கண்டறிய 1,56,843- மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. சென்னையில் இன்று 215- பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 20,934- ஆக உள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்காவில் 57,159 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
அமெரிக்காவில் 57,159 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
2. தடுப்பூசி முகாமில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு
சைதாப்பேட்டையில் நடைபெற்று வரும் தடுப்பூசி முகாமில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.
3. ஐபிஎல் 2021- போட்டியை நேரில் காண செல்லும் ரசிகர்களுக்கு கட்டுப்பாடுகள் என்னென்ன?
கொரோனா வைரஸ் ஊடுருவலால் பாதியில் நிறுத்தப்பட்ட ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இன்று மீண்டும் தொடங்குகிறது.
4. கொரோனா பாதிப்பு; இலங்கையில் பலி எண்ணிக்கை 12 ஆயிரம் ஆக உயர்வு
இலங்கையில் கொரோனா பாதிப்புகளுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 12 ஆயிரம் கடந்துள்ளது.
5. இந்தியாவில் 30,773 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 30,773 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.