மாநில செய்திகள்

காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை + "||" + Suicide of a young woman married for love

காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை

காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை
குழந்தை இல்லாத ஏக்கத்தில் காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
புதுவை பெரியகாலாப்பட்டு காந்திநகரை சேர்ந்தவர் அப்துல் சமது. இவரது மகள் உம்மு சல்மா (வயது 19). இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பெரிய காலாப்பட்டு செல்லியம்மன் நகரை சேர்ந்த சக்திவேல் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 
இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இதனால் உம்மு சல்மா மனவேதனையில் இருந்து வந்தார். நேற்று முன்தினம் கணவர், மாமியார் வேலைக்கு சென்று விட்டனர். வீட்டில் தனிமையில் இருந்த உம்மு சல்மா தற்கொலை செய்ய முடிவு செய்து நைலான் கயிற்றால் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்து காலாப்பட்டு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உம்மு சல்மாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தொடர்புடைய செய்திகள்

1. காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை
தக்கலை அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் விஷ பொடியை திண்று தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.