மாநில செய்திகள்

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தும் அலுவலர்களை நியமிக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு + "||" + State Election Commission orders to appoint election officers for 9 districts in Tamil Nadu

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தும் அலுவலர்களை நியமிக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தும் அலுவலர்களை நியமிக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு
தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தும் அலுவலர்களை நியமிக்க மாவட்ட கலெக்டர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை,

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பான வழக்கில், வரும் செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்குமாறு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து புதிதாக அமைக்கப்பட்ட மாவட்டங்களில் தேர்தலை நடத்துவது குறித்து தமிழக அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையத்திற்கு இடையே ஆலோசனை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களை நியமிக்க தற்போது மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தேர்தல் நடத்தும் அலுவலர்களை நியமனம் செய்திட மாவட்ட தேர்தல் அலுவலர்கள், கலெக்டர்களுக்கு அதிகாரம் வழங்கப்படுவதாகவும், நியமனம் தொடர்பான விவரங்களை நாளைக்குள் அனுப்ப வேண்டும் என்றும் மாவட்ட கலெக்டர்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் ஆக்கப்பூர்வ எதிர்க்கட்சியாக பா.ஜனதா செயல்படுகிறது: அண்ணாமலை
தமிழகத்தில் ஆக்கப்பூர்வ எதிர்க்கட்சியாக பா.ஜனதா செயல்படுகிறது என்று மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.
2. தமிழகத்தில் 10-ந் தேதி முதல் தொடர் வேலைநிறுத்தம்; அனைத்து மீனவர் கூட்டமைப்பு தீர்மானம்
கோரிக்கைகைகளை நிறைவேற்றாவிட்டால் தமிழகம் முழுவதும் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அனைத்து மீனவர் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
3. தமிழகத்தில் இன்று 1,358 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்
தமிழகத்தில் தற்போது 13,034 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
4. தமிழகத்தில் இன்று 1,140 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழகத்தில் தற்போது 13,280 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
5. தமிழகத்தில் இன்று 1,170 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழகத்தில் தற்போது 14,058 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.