மாநில செய்திகள்

மதுரையில் 4 முக்கிய கோயில்களில் ஆகஸ்ட் 8 வரை தரிசனத்திற்கு தடை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு + "||" + Restriction on darshan in 4 major temples in Madurai till August 8

மதுரையில் 4 முக்கிய கோயில்களில் ஆகஸ்ட் 8 வரை தரிசனத்திற்கு தடை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

மதுரையில் 4 முக்கிய கோயில்களில் ஆகஸ்ட் 8 வரை தரிசனத்திற்கு தடை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
மதுரையில் 4 முக்கிய கோயில்களில் ஆகஸ்ட் 2 முதல் 8 ஆம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை,

மதுரை மாவட்டத்தில் கொரோனா 3-வது அலை பரவலை தடுக்கும் முயற்சியாக, மதுரையில் பக்தர்களின் வருகை அதிகமாக உள்ள 4 முக்கிய திருக்கோயில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்படுவதாக மதுரை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 

அதன்படி உலகப்புகழ் பெற்ற மீனாட்சியம்மன் கோயில், அழகர் மலையில் உள்ள கள்ளழகர் கோயில், பழமுதிர்ச்சோலை முருகன் கோயில் மற்றும் திருப்பறங்குன்றம் முருகன் கோயில் ஆகிய கோயில்களில் ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.  

இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ் அணிசேகர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கொரோனா பரவலின் 3-வது அலையில் இருந்து மக்களை பாதுகாக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மதுரை மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மதுரை-தேனி இடையே அதிவேக ரெயில் எஞ்சின் இயக்கி சோதனை
ஆண்டிப்பட்டியில் இருந்து தேனி வரையிலான 17 கி.மீ. தூரத்திற்கு அதிவேகத்தில் ரெயிலை இயக்கி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
2. மதுரையில் பாலம் இடிந்து விழுந்து விபத்து - 3 பேர் மீது வழக்குப்பதிவு
மதுரையில் பாலம் இடிந்து விழுந்து விபத்து தொடர்பாக 3 பேர் மீது மதுரை தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
3. மதுரையில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மூவாயிரம் ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
4. மதுரையில் கடந்த 8 மாதங்களில் 165 போக்சோ வழக்குகள் பதிவு
மதுரையில் கடந்த 8 மாதங்களில் 165 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
5. மதுரை எய்ம்ஸ் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறுமா? - நிர்வாகக்குழு இன்று முக்கிய ஆலோசனை
மதுரை எய்ம்ஸ் மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பாக நிர்வாகக்குழு இன்று முக்கிய ஆலோசனை நடத்த உள்ளது.