கேரளாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் உள்ளது - கேரள சுகாதாரத்துறை


கேரளாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் உள்ளது - கேரள சுகாதாரத்துறை
x
தினத்தந்தி 2 Aug 2021 11:51 AM GMT (Updated: 2 Aug 2021 11:51 AM GMT)

கேரளாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் உள்ளது என கேரள சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

திருவனந்தபுரம், 

கேரளாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் உள்ளது என கேரள சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து  வீணா ஜார்ஜ் கூறுகையில், “ கேரளாவில் ஏப்ரல் மாதத்தில் கொரோனா 2-வது அலை தொடங்கியது. மே மாதம் உச்சம் பெற்றது. 

தற்போது தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது. கேரளாவில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் கொரொனா பாதிப்புக்கு உள்ளாகவில்லை. அவர்களுக்கு தற்போது பாதிப்பு ஏற்படலாம் என்பதை ஐசிஎம்.ஆர் செரோ ஆய்வு காட்டுகிறது. 

இதன் பொருள் கேரள அரசின் பாதுகாப்பு நடவடிக்கை சரியான திசையில் செல்கிறது என்பதேயாகும். அரசின் நடவடிக்கைக்கு மக்களும் உதவுகிறார்ர்கள்.  இப்போது மத்திய அரசிடம் அதிக தடுப்பூசியை எதிர்பார்க்கிறோம்.  குறுகிய காலத்தில் அதிக தடுப்பூசியை செலுத்த வேண்டும் என்பதே எங்களின் நோக்கமாக உள்ளது” என்றார்.


Next Story