நாளை முதல் காரைக்குடியில் இருந்து திருவாரூருக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரெயில் இயக்கம்


நாளை முதல் காரைக்குடியில் இருந்து திருவாரூருக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரெயில் இயக்கம்
x
தினத்தந்தி 3 Aug 2021 1:54 AM GMT (Updated: 3 Aug 2021 1:54 AM GMT)

காரைக்குடி ரெயில் நிலையத்தில் இருந்து திருவாரூருக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரெயில் நாளை(புதன்கிழமை) முதல் இயக்கப்படுகிறது.

மதுரை,

மதுரை கோட்டத்துக்கு உட்பட்ட காரைக்குடியில் இருந்து அகல ரெயில் பாதையில் திருவாரூருக்கு ரெயில்கள் இயக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் வலியுறுத்தப்பட்டு வந்தது. இதற்கிடையே, அந்த பாதையில் ரெயில்கள் இயக்க தென்னக ரெயில்வே அனுமதி அளித்துள்ளது.

அதன்படி, காரைக்குடி-திருவாரூர் மார்க்கத்தில் நாளை (புதன்கிழமை) முதல் முன்பதிவில்லாத சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் (வ.எண்.06197) திருவாரூர் ரெயில் நிலையத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை தவிர பிற நாட்களில் காலை 8.15 மணிக்கு புறப்படும். மதியம் 2.15 மணிக்கு காரைக்குடி ரெயில் நிலையம் வந்தடையும்.

மறுமார்க்கத்தில் இந்த ரெயில் (வ.எண்.06198) ஞாயிற்றுக்கிழமை தவிர பிற நாட்களில் காரைக்குடியில் இருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டு இரவு 8.30 மணிக்கு திருவாரூர் ரெயில் நிலையம் சென்றடையும்.

டெமு பெட்டிகள் இணைக்கப்பட்ட இந்த ரெயில், மாங்குடி, மாவூர்ரோடு, திருநெல்லிக்காவல், அம்மனூர், ஆலத்தம்பாடி, மணலி, திருத்துறைப்பூண்டி, தில்லைவளாகம், முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, ஒட்டங்காடு, பேராவூரணி, ஆயின்குடி, அறந்தாங்கி, வளரமாணிக்கம், பெரியகோட்டை, கண்டனூர், புதுவயல் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

Next Story