மாநில செய்திகள்

கருணாநிதி படத்திறப்பு விழாவில் பங்கேற்க முறைப்படி அழைத்தும் அ.தி.மு.க. பங்கேற்கவில்லை -அமைச்சர் துரைமுருகன் + "||" + Karunanidhi will be formally invited to participate in the launch ADMK Did not participate Minister duraimurugan

கருணாநிதி படத்திறப்பு விழாவில் பங்கேற்க முறைப்படி அழைத்தும் அ.தி.மு.க. பங்கேற்கவில்லை -அமைச்சர் துரைமுருகன்

கருணாநிதி படத்திறப்பு விழாவில் பங்கேற்க முறைப்படி அழைத்தும் அ.தி.மு.க. பங்கேற்கவில்லை -அமைச்சர் துரைமுருகன்
மேகதாது அணை பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட் உத்தரவை மதிக்கமாட்டோம் என கர்நாடகா கூறுவது ஏற்கதக்கது அல்ல என அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
சென்னை

தமிழக சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும் கருணாநிதி உருவப் படத்திறப்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, தி.க.வீரமணி, வைகோ, திருமாவளவன், இடதுசாரி தலைவர்கள் பங்கேற்றனர். அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ம.க. ஜி.கே.மணி, த.மா.கா. ஜி.கே.வாசன், பா.ஜ.க. அண்ணாமலை ஆகியோரும் கலந்துகொண்டனர். 

பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க புறக்கணித்தது.  அதுப்பொல் தே.மு.தி.க.வும்பங்கேற்காமல் புறக்கணித்தது.

இதுகுறித்து அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது;-

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி படத்திறப்பு விழாவில் அ.தி.மு.க.வினர் பங்கேற்காதது அவர்களின் விருப்பத்தை பொறுத்தது. சட்டமன்றத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா படத்திறப்புக்கு எங்களுக்கு அழைப்பிதழ் மட்டுமே வந்தது.கருணாநிதி படத்திறப்பு விழாவில் பங்கேற்க முறைப்படி அழைத்தும் அ.தி.மு.க. பங்கேற்கவில்லை

நான் எடப்பாடி பழனிசாமியிடம் தொலைபேசியில் பேசி தவறாமல் விழாவுக்கு வர வேண்டும் என கூறினேன்;  சேலம் போய்க்கொண்டிருக்கிறேன், கலந்து பேசி சொல்கிறேன்  என்றார்; போய்ச்சேர்ந்தவர், வரவில்லை என்பதை அழைத்த என்னிடம் சொல்லவில்லை. விழாவில் தான் பங்கேற்கவில்லை என சட்டப்பேரவை செயலரிடம் எடப்பாடி பழனிசாமி தெர்வித்துள்ளார் .

மேகதாது அணை பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட் உத்தரவை மதிக்கமாட்டோம் என கர்நாடகா கூறுவது ஏற்கதக்கது அல்ல என கூறினார்.