தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் சதவிகிதம் குறைவாகவே உள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்


தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் சதவிகிதம் குறைவாகவே உள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
x
தினத்தந்தி 3 Aug 2021 8:43 AM GMT (Updated: 3 Aug 2021 8:43 AM GMT)

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் சதவிகிதம் குறைவாகவே உள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

சென்னை,

தமிழகத்தில் குறைந்து வந்த கொரோனா வைரஸ் பரவல் கடந்த ஒரு வாரமாக மீண்டும் அதிகரித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.

அதன் படி கொரோனா பரவலை கட்டுப்படுத்த சென்னை, செங்கல்பட்டு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதே வேளையில், தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியையும் தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில்,கொரோனா தொற்று பரவல் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில்,

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் சதவிகிதம் குறைவாகவே உள்ளது. தமிழகம் வந்த கோவாக்சின் தடுப்பூசிகள் அனைத்து மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டுள்ளன. தமிழகத்தில் கோவாக்சின் தடுப்பு மருந்து தட்டுப்பாடு இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

Next Story