மாநில செய்திகள்

கிழக்கிந்திய கம்பெனி போல, வடக்கில் பா.ஜ.க. வடக்கிந்திய கம்பெனியாக உள்ளது - கமல்ஹாசன் குற்றச்சாட்டு + "||" + Like the East India Company BJP in the north Is a North Indian company Kamal Haasan charge

கிழக்கிந்திய கம்பெனி போல, வடக்கில் பா.ஜ.க. வடக்கிந்திய கம்பெனியாக உள்ளது - கமல்ஹாசன் குற்றச்சாட்டு

கிழக்கிந்திய கம்பெனி போல, வடக்கில் பா.ஜ.க. வடக்கிந்திய கம்பெனியாக உள்ளது - கமல்ஹாசன் குற்றச்சாட்டு
மேகதாது விஷயத்தில் பா.ஜ.க இரட்டை வேடம் போடுகிறது என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கோவை

கோவையில் கமல்ஹாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நேர்மையாக எங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி. அவர்களுக்கும் ஜனநாயகத்திற்கும் வணக்கம் தெரிவிக்க கோவை வந்துள்ளேன்.

கோவையில் மக்களை நான் சந்தித்து நன்றி கூற இருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டது மக்களை எண்ணித்தான். மக்களின் நலன் பார்த்தே ஆளுங்கட்சி செயல்பட்டு வரும் நிலையில் அழுத்தம் எதுவும் கொடுக்கவில்லை.

கொங்குநாடு அரசியல் கோஷம் மட்டுமே, மக்கள் தேவை அல்ல. கோவை மக்களுக்கு திட்டங்களில் பிரிவினை பார்க்கப்படுகிறது. உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் பங்கு மட்டுமே இருக்க வேண்டும்.

மேலும்கிழக்கிந்திய கம்பெனி போல, வடக்கில் பா.ஜ.க. எனும் வடக்கிந்திய கம்பெனி தயாராகி வருகிறது. மேகதாது விஷயத்தில் பா.ஜ.க இரட்டை வேடம் போடுகிறது.

கொரோனா நடவடிக்கையில் ஆளுங்கட்சி முடிந்ததை செய்கிறது. இன்னும் அதிகமாக, தீவிரமாக செயல்பட வேண்டும்.

தோல்வியை சினிமாவிலும் கற்றிறுக்கிறேன். கோவை மக்கள் எங்களுக்கு நம்பிக்கையை அளித்துள்ளார்கள். இழந்த அரசியல் மாண்பை மீட்டெடுப்பது எங்கள் பணி. தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை ஏமாற்றுவது தமிழகத்தில் உள்ள கட்சிகளுக்கு புதிதல்ல. பென்னிகுயிக் சிலையை இடமாற்றுவதை அரசு கைவிட வேண்டும் என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. காந்திக்குப் பிறகு காலம் நமக்களித்த இன்னொரு தேசப்பிதா அப்துல் கலாம் - கமல்ஹாசன்
அப்துல் கலாம் பிறந்தநாளான இன்று கமல்ஹாசன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், காந்திக்குப் பிறகு காலம் நமக்களித்த இன்னொரு தேசப்பிதா அப்துல் கலாம் என பதிவிட்டுள்ளார்.
2. “உள்ளாட்சித் தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு நன்றி” - கமல்ஹாசன்
உள்ளாட்சித் தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு நன்றி மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
3. உ.பி. வன்முறை: கமல்ஹாசன் கண்டனம்
உ.பி. நடைபெற்ற வன்முறைக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் டுவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
4. மேற்கு வங்காள தேர்தல் பிரசாரத்தில் பா.ஜ.க. தேசிய துணைத்தலைவர் மீது தாக்குதல்
மேற்கு வங்காளத்தில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடந்த சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றபோதும், அதன் தலைவரான மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் தோற்றுப்போனார்.
5. ஓ.பி.சி. கணக்கெடுப்புக்கு மறுப்பு, பா.ஜ.க.வின் சுயரூபத்தை காட்டுகிறது: மாயாவதி
ஓ.பி.சி. கணக்கெடுப்புக்கு மறுப்பு, பா.ஜ.க.வின் சுயரூபத்தை காட்டுகிறது என்று மாயாவதி கூறியுள்ளார்.