கேளம்பாக்கம் பள்ளிக்கும், தனக்கும் தொடர்பில்லை-சிவசங்கர் பாபா


கேளம்பாக்கம் பள்ளிக்கும், தனக்கும்  தொடர்பில்லை-சிவசங்கர் பாபா
x
தினத்தந்தி 3 Aug 2021 11:18 AM GMT (Updated: 2021-08-03T16:48:06+05:30)

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில்ஹரி பள்ளிக்கும் தனக்கும் தொடர்பில்லை என ஜாமீன் மனுவில் சிவசங்கர் பாபா தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

சென்னை,

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில்ஹரி பள்ளிக்கும் தனக்கும் தொடர்பில்லை என ஜாமீன் மனுவில் சிவசங்கர் பாபா தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆன்மிகம், தமிழ் சார்ந்த சொற்பொழிவுக்கு மட்டுமே அந்த பள்ளிக்கு சென்றதாக சிவசங்கர் பாபா மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

ஆன்மிக பயணத்திற்காக டெல்லி சென்ற தன்னை காவல் துறையினர் கைது செய்ததாகவும் சிவசங்கர் பாபா தரப்பில்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. இதையடுத்து, போக்சோ வழக்கில் கைதான சிவசங்கர் பாபா ஜாமீன் கோரிய வழக்கில் சிபிசிஐடி பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Next Story