தமிழகத்தில் மேலும் 1,908 பேருக்கு கொரோனா தொற்று- சென்னையில் பாதிப்பு அதிகரிப்பு


தமிழகத்தில் மேலும் 1,908 பேருக்கு கொரோனா தொற்று- சென்னையில் பாதிப்பு அதிகரிப்பு
x
தினத்தந்தி 3 Aug 2021 2:25 PM GMT (Updated: 3 Aug 2021 2:25 PM GMT)

சென்னையில் கொரோனா பாதிப்பு மீண்டும் 200-ஐ தாண்டியுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக தொற்று பாதிப்பு சற்று ஏற்ற இறக்கமாக உள்ளது. கடந்த 4 தினங்களாக தொற்று பாதிப்பு உயர்ந்து வந்த நிலையில், நேற்றும் இன்றும் சற்று குறைந்துள்ளது. நேற்று  பாதிப்பு  1957- ஆக இருந்த நிலையில் இன்று பாதிப்பு 1908- ஆக குறைந்துள்ளது. 

தமிழக  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை   வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- “ தமிழகத்தில் மேலும் 1,908- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  தொற்று பாதிப்பில் இருந்து இன்று 2,047-பேர் குணம் அடைந்துள்ளனர்.  

கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக இன்று உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 29 ஆக உள்ளது. தொற்று பாதிப்பைக் கண்டறிய இன்று 1 லட்சத்து 45 ஆயிரத்து 585- மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.  சென்னையில் இன்று கொரோனா பாதிப்பு 203 ஆக உயர்ந்துள்ளது.  கொரோனா தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 20,217- ஆக  உள்ளது. 


Next Story