மக்களை தேடி மருத்துவம் திட்டம்; நாளை முதல்-அமைச்சர் தொடங்கி வைக்கிறார் - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்


மக்களை தேடி மருத்துவம் திட்டம்; நாளை முதல்-அமைச்சர் தொடங்கி வைக்கிறார் - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
x
தினத்தந்தி 4 Aug 2021 6:22 AM GMT (Updated: 4 Aug 2021 6:45 AM GMT)

மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை முதல்-அமைச்சர் நாளை தொடங்கி வைக்கிறார் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

சென்னை,

சென்னை நுங்கம்பாக்கத்தில் கொரோனா தடுப்பூசி போடும் முகாமை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று ஆய்வு செய்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:-

மிழகத்திற்கு இதுவரை 2.54 கோடி டோஸ் கொரோனா தடுப்பு ஊசிகள் வந்துள்ளது. அதில் 2.2 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி மருந்துகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தின் சில மாவட்டங்களில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் கொரோனா தடுப்பு விதிகளை பொதுமக்கள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்ற கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் யாரும் தேவையில்லாமல் வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது. கடைகள் திறப்பதற்கு நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. கோவில்களுக்கு பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது

மக்களை தேடி மருத்துவம் திட்டம் தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். இந்த திட்டத்தின்படி, மக்களின் வீடுகளுக்கு சென்று சிகிச்சை அளிப்பதே இதன் நோக்கம், அதை சுகாதாரப்பணியாளர்கள் செய்வார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story