மாநில செய்திகள்

சென்னையில் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு தட்டுப்பாடு - சென்னை மாநகராட்சி அறிவிப்பு + "||" + Shortage of Covieshield vaccine in Chennai - Chennai Corporation announcement

சென்னையில் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு தட்டுப்பாடு - சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னையில் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு தட்டுப்பாடு - சென்னை மாநகராட்சி அறிவிப்பு
சென்னையில் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
சென்னை,

சென்னையில் கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சென்னையில் நீண்ட நாட்களாக கோவிஷீல்டு தடுப்பூசி மட்டுமே பொதுமக்களுக்கு அதிகளவில் அளிக்கப்பட்டு வந்து நிலையில், மீண்டும் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. 

இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் இன்று எந்த மையங்களிலும் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கோவாக்சின் தடுப்பூசியை பொறுத்தவரை ஆன்லைனில் பதிவு செய்தவர்கள் 150 பேருக்கும், நேரடியாக வருபவர்கள் 250பேருக்கும் தடுப்பூசி போடப்படும் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் இதுவரை 40 லட்சம் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது - சுகாதாரத்துறை தகவல்
சென்னையில் இதுவரை மொத்தம் 40 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
2. சென்னையில் கூடுதலாக 155 தடுப்பூசி முகாம்கள் - மாநகராட்சி அறிவிப்பு
பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு சென்னையில் கூடுதலாக 155 தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் என மாநகராட்சி அறிவிtஹ்துள்ளது.
3. ஆகஸ்ட் 30: சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.99.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
4. ஆகஸ்ட் 29: சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.99.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
5. சென்னையில் 112 கல்லூரிகளில் 1-ந்தேதி தடுப்பூசி முகாம்: மாணவர்கள், பேராசிரியர்களுக்காக மாநகராட்சி ஏற்பாடு
சென்னையில் 112 கல்லூரிகளில் 1-ந்தேதி முதல் தடுப்பூசி முகாம் நடைபெறுவதால், மாணவர்கள், பேராசிரியர்கள் கல்லூரிக்கு ஆதார் அட்டையுடன் வர வேண்டும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.