விருதுநகர்-ராமநாதபுரம் மாவட்டங்களில் வழிபாட்டு தலங்களில் தரிசனத்திற்கு பக்தர்களுக்கு தடை


விருதுநகர்-ராமநாதபுரம் மாவட்டங்களில் வழிபாட்டு தலங்களில் தரிசனத்திற்கு பக்தர்களுக்கு தடை
x
தினத்தந்தி 4 Aug 2021 7:52 AM GMT (Updated: 4 Aug 2021 7:52 AM GMT)

விருதுநகர்-ராமநாதபுரம் மாவட்டங்களில் வழிபாட்டு தலங்களில் ஆகஸ்ட் 12 வரை தரிசனத்திற்கு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

விருதுநகர்: 

ஆடிப்பெருக்கையொட்டி கோவில்களில் விழா நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் தற்போது கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டதால் கோவில்களில் ஆடிப்பெருக்கு விழா பக்தர்கள் இன்றி நடந்தது. 

இந்த நிலையில் விருதுநகர்-ராம்நாதபுரம்  மாவட்டங்களில்  வழிபாட்டு தலங்களில் ஆகஸ்ட் 12 வரை தரிசனத்திற்கு பக்தர்களுக்கு  தடை விதிக்கப்பட்டு உள்ளது.

விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

விருதுநகர் மாவட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக இந்து, கிறிஸ்துவ, முஸ்லீம் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் ஆகஸ்ட் 11 வரை பக்தர்கள் வழிபாடு முற்றிலுமாக தடைசெய்யப்படுகிறது. 

விலங்குகள் பலியிடுதல், நேர்த்திக்கடன் செலுத்துதல், திருவிழாக்கள் நடத்துதல், ஜெப கூட்டங்கள், மசூதிகளில் கூட்டுத் தொழுகைகள், மத ஊர்வலங்கள் உள்பட அனைத்து மதம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கும் தடைவிதிக்கப்படுகிறது’’ என்று தெரிவித்துள்ளார். 

இதேபோல ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சந்திரகலா வெளியிட்ட அறிக்கையில்

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் உள்பட ஏனைய கோயில்களில் இன்று முதல் ஆகஸ்ட் 12 வரை  தரிசனத்திற்கு அனுமதி இல்லை” என தெரிவித்துள்ளார்.

Next Story