மாநில செய்திகள்

சட்டப்பேரவையில் வரும் 13ஆம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் + "||" + Tamil Nadu budget to be tabled in the Assembly on the 13th

சட்டப்பேரவையில் வரும் 13ஆம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல்

சட்டப்பேரவையில் வரும் 13ஆம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல்
சட்டப்பேரவையில் வரும் 13ஆம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் செய்ய முதல்-அமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை,

தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் விரைவில் தொடங்க உள்ளது. இந்த கூட்டத்தொடரின் முதல் நாளில் நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்வார்.

பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்பதாக அமைச்சரவை கூடி விவாதிப்பது வழக்கம். தமிழகத்தில் மக்கள் நலத் திட்டங்களுக்காக துறை வாரியாக அறிவிக்கப்பட உள்ள புதிய திட்டங்கள், அதற்கு ஆகும் செலவுகள் போன்றவை, அமைச்சரவை கூட்டத்தில் விரிவாக பேசப்படும்.

இந்த நிலையில் தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு நடைபெற்றது.   சட்டப்பேரவையில் வரும் 13ஆம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என  முதல்-அமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இந்தத் தகவலை சட்டப்பேரவை செயலர் சீனிவாசன் இன்று அறிவித்துள்ளார்.

தமிழக முதல்-அமைச்சராக மு.க. ஸ்டாலின் பதவியேற்ற பிறகு, முதல் முறையாக தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை ஆகஸ்ட் 13ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. 

தேர்தலில் வென்று திமுக ஆட்சி அமைந்ததை அடுத்து முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. பொது பட்ஜெட் உடன் விவசாய பட்ஜெட்டும் தனியாக தாக்கல் செய்யப்படுகிறது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்ய உள்ள முதல் பட்ஜெட் இதுவாகும்.