ஒலிம்பிக் ஆக்கிப் போட்டி; இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றிருப்பது எல்லையில்லாத மகிழ்ச்சி அளிக்கிறது - டாக்டர் ராமதாஸ்


ஒலிம்பிக் ஆக்கிப் போட்டி; இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றிருப்பது எல்லையில்லாத மகிழ்ச்சி அளிக்கிறது - டாக்டர் ராமதாஸ்
x
தினத்தந்தி 5 Aug 2021 5:47 AM GMT (Updated: 5 Aug 2021 5:47 AM GMT)

ஒலிம்பிக் ஆக்கிப் போட்டியில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றிருப்பது எல்லையில்லாத மகிழ்ச்சி அளிக்கிறது என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை,

டோக்கியோ ஒலிம்பிக் ஆக்கிப்போட்டியில் வெண்கலம் வென்று சாதித்த இந்திய ஆடவர் ஆக்கி அணிக்கு வாழ்த்துகள் குவிகின்றன. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, ராகுல்காந்தி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இந்திய ஆக்கி அணிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று சாதித்த இந்திய ஆடவர் ஆக்கி அணிக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கிப் போட்டிகளில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றிருப்பது எல்லையில்லாத மகிழ்ச்சி அளிக்கிறது.  ஹாக்கிப் போட்டிகளில் இந்தியாவின் பதக்கக் கனவை சாத்தியமாக்கிய இந்திய அணி வீரர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்... பாராட்டுகள்!

ஹாக்கி இந்தியாவின் தேசிய விளையாட்டு. ஆனால், 1980-ஆம் ஆண்டுக்குப் பிறகு  41 ஆண்டுகளாக ஹாக்கியில் நம்மால் பதக்கம் வெல்ல முடியாதது வேதனையாகவே இருந்து வந்தது. இன்றைய வெற்றியின் மூலம் வேதனை மகிழ்ச்சியாகவும், பெருமிதமாகவும் மாறியிருக்கிறது!

2024 பாரிஸ் ஒலிம்பிக்  ஹாக்கிப் போட்டிகளில் இந்தியா தங்கப் பதக்கம் வென்று இழந்த பெருமையை முழுமையாக பெற வேண்டும். அந்த அணியில் தமிழகம் பிரதிநிதித்துவம் பெற வேண்டும் என்பதே தமிழர்களின் விருப்பம். அது நிச்சயமாக நிறைவேறும்! என கூறியுள்ளார்.

Next Story