ஊரடங்கு நீட்டிப்பு: செப்டம்பர் 1ந்தேதி முதல் பள்ளிகள் திறக்க உத்தேசம்; மத வழிபாட்டுக்கு தடை


ஊரடங்கு நீட்டிப்பு:  செப்டம்பர் 1ந்தேதி முதல் பள்ளிகள் திறக்க உத்தேசம்; மத வழிபாட்டுக்கு தடை
x
தினத்தந்தி 6 Aug 2021 3:21 PM GMT (Updated: 6 Aug 2021 3:21 PM GMT)

தமிழகத்தில் செப்டம்பர் 1ந்தேதி முதல் 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க உத்தேசிக்கப்பட்டு உள்ளது.


சென்னை,

தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அடுத்த இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டு உள்ளது.  இதன்படி, ஆகஸ்டு 23ந்தேதி காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதேபோன்று, தமிழகத்தில் வரும் 16ந்தேதி முதல் மருத்துவ கல்லூரிகளை திறக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  செப்டம்பர் 1ந்தேதி முதல் 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க உத்தேசிக்கப்பட்டு உள்ளது.

வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய 3 நாட்கள் அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் வழிபாட்டிற்கு தடை விதிக்கப்படுகிறது.

மக்கள் அதிகம் கூடுவது தவிர்க்கப்படும் வகையில் இறைச்சி, மீன் கடைகளை தனித்தனியாக பிரித்து விற்பனை செய்ய அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளது.


Next Story