மாநில செய்திகள்

தி.மு.க.வின் தகவல் தொழில்நுட்ப அணி இணைச்செயலாளராக ஆர்.மகேந்திரன் நியமனம் + "||" + DMKs IT team As co-secretary Appointment of R. Mahendran

தி.மு.க.வின் தகவல் தொழில்நுட்ப அணி இணைச்செயலாளராக ஆர்.மகேந்திரன் நியமனம்

தி.மு.க.வின் தகவல் தொழில்நுட்ப அணி இணைச்செயலாளராக ஆர்.மகேந்திரன் நியமனம்
மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகி அண்மையில் தி.மு.க.வில் இணைந்தவர் டாக்டர் ஆர்.மகேந்திரன்.
சென்னை

மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவராக செயல்பட்டு வந்தவர் கோவையைச் சேர்ந்த டாக்டர் ஆர்.மகேந்திரன். 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட்டு 1.50 லட்சம் வாக்குகள் பெற்றார். பின்னர், 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் சிங்காநல்லூர் தொகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

பின்னர் கமல்ஹாசனிடம் ஜனநாயகத் தன்மை இல்லை என்று கூறி கட்சியிலிருந்து முதல் ஆளாக மகேந்திரன் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து சந்தோஷ் பாபு குமரவேல் உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து வெளியேறினார்கள்.

இந்நிலையில் சமீபத்தில் மகேந்திரன் தனது ஆதரவாளர்களுடன் தி.மு.க.வில் தன்னை இணைத்துக் கொண்டார். அப்போது, எங்கு தலைமை சரியாக உள்ளதோ அங்குதானே தொண்டர்கள் இணைவார்கள். நான் அரசியலுக்கு வந்தபோது செயல்பாடு அடிப்படையில் ஒரு தலைவரைத் தேர்வு செய்தேன். அவர் மீது நம்பிக்கை வைத்தேன். ஆனால், அந்த நம்பிக்கை நிறைவேறவில்லை. பத்தாண்டுகளாக ஆட்சியில் இல்லாத தி.மு.க கடந்த 2 மாதங்களில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது என்று மகேந்திரன் கூறியிருந்தார்.

இந்த நிலையில் தி.மு.க.  தகவல் தொழில்நுட்ப அணி இணைச் செயலாளராக ஆர்.மகேந்திரன் நியமனம் செய்யப்பட்டிருப்பதாக துரைமுருகன் அறிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. காந்திக்குப் பிறகு காலம் நமக்களித்த இன்னொரு தேசப்பிதா அப்துல் கலாம் - கமல்ஹாசன்
அப்துல் கலாம் பிறந்தநாளான இன்று கமல்ஹாசன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், காந்திக்குப் பிறகு காலம் நமக்களித்த இன்னொரு தேசப்பிதா அப்துல் கலாம் என பதிவிட்டுள்ளார்.
2. “உள்ளாட்சித் தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு நன்றி” - கமல்ஹாசன்
உள்ளாட்சித் தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு நன்றி மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
3. உ.பி. வன்முறை: கமல்ஹாசன் கண்டனம்
உ.பி. நடைபெற்ற வன்முறைக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் டுவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
4. பதவி ஏற்ற 4 மாதத்தில் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம்: மு.க.ஸ்டாலின்
தி.மு.க.வின் 505 தேர்தல் வாக்குறுதியில் 202 வாக்குறுதிகள் 4 மாதங்களுக்குள் நிறைவேற்றப்பட்டு உள்ளன என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
5. அ.தி.மு.க.வின் உட்கட்சி விவகாரம் பற்றி பேசுவதற்கு யாருக்கும் தகுதி கிடையாது -முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
அ.தி.மு.க.வின் உட்கட்சி விவகாரம் பற்றி பேசுவதற்கு யாருக்கும் தகுதி கிடையாது.அ.தி.மு.க. ஆட்சியில் செய்த திட்டங்களை மக்களிடம் எடுத்துச் சொல்வோம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.