மாநில செய்திகள்

அர்ச்சகர் நியமனம்: தற்போதைய நிலையே நீடிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு + "||" + Appointment of Priest: Chennai High Court order to continue as it is now

அர்ச்சகர் நியமனம்: தற்போதைய நிலையே நீடிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு

அர்ச்சகர் நியமனம்: தற்போதைய நிலையே நீடிக்க  சென்னை ஐகோர்ட் உத்தரவு
தமிழகம் முழுவதும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வரும் கோவில்களில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பாக விண்ணப்பங்களை வரவேற்று அறநிலைத்துறை விளம்பரம் வெளியிட்டது.
சென்னை,

தமிழகம் முழுவதும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வரும் கோவில்களில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பாக விண்ணப்பங்களை வரவேற்று அறநிலைத்துறை விளம்பரம் வெளியிட்டது. அதில், அர்ச்சகர்களுக்கான சான்றிதழ் படிப்பை முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிவிப்பை ரத்து செய்து, ஆகம விதிகளின்படி அர்ச்சகர்களை நியமிக்க உத்தரவிடக் கோரி, அகில இந்திய ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்க பொதுச்செயலர் பி.எஸ்.ஆர்.முத்துக்குமார் சார்பாக வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், ஆகம விதிகளைப் பின்பற்றி தான் அர்ச்சகர்கள் நியமிக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு முரணாக இந்த விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.

ஆகம விதிப்படி முறையான பயிற்சி பெறாதவர்களை நியமிப்பது தவறானது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதாசுமந்த், அர்ச்சகர் பணிக்கான விண்ணப்பங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது. தற்போதைய நிலையே தொடர வேண்டும். மேலும், மனுவுக்கு ஆகஸ்டு 25-ந்தேதிக்குள் இந்து சமய அறநிலைய துறை பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. வேதா நிலைய வழக்கில் மேல்முறையீடு செய்யாதது ஏன்? தமிழ்நாடு அரசு விளக்கம்
தனி நீதிபதி சேஷசாயி பிறப்பித்த உத்தரவை ஏற்று வேதா நிலைய சாவிகள் தீபா, தீபக்கிடம் ஒப்படைக்கப்பட்டதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை அரசுடமையாக்கிய சட்டம் ரத்து- சென்னை ஐகோர்ட்டு
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லமான வேதா நிலையத்தை அரசுடமையாக்கிய சட்டம் ரத்து செய்யப்படுவதாக சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
3. முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கில் தி.மு.க. எம்.பி.க்கு ஜாமீன்
முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கில் கைதான கடலூர் தி.மு.க எம்.பி ரமேஷூக்கு சென்னை ஐகோர்ட் ஜாமீன் வழங்கியுள்ளது.
4. சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி இடமாற்றம்; ஜனாதிபதி ஒப்புதல்
தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜியை இடமாற்றம் செய்யும், கொலிஜியத்தின் பரிந்துரைக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.
5. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் புதிதாக கல்லூரிகள் துவங்க கூடாது - சென்னை ஐகோர்ட்
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் புதிதாக கல்லூரிகள் துவங்க கூடாது என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.