மாநில செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் 10 வயது சிறுவனின் சிறுநீரக சிகிச்சைக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் உதவி + "||" + Minister Ma Subramanian assists in kidney treatment of 10 year old boy at Chennai Airport

சென்னை விமான நிலையத்தில் 10 வயது சிறுவனின் சிறுநீரக சிகிச்சைக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் உதவி

சென்னை விமான நிலையத்தில் 10 வயது சிறுவனின் சிறுநீரக சிகிச்சைக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் உதவி
சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியனை சந்தித்து பெற்றோர் உதவி கேட்டதால், 10 வயது சிறுவனின் சிறுநீரக பிரச்சினைக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்க அமைச்சர் ஏற்பாடு செய்தார்.
ஆலந்தூர்,

சென்னையை அடுத்த ஆலந்தூரை சோ்ந்த 10 வயது சிறுவன் நவீன். இவனுக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு தனியாா் ஆஸ்பத்திரிகளில் அறுவை சிகிச்சை செய்ய பல லட்சம் ரூபாய் செலவாகும். ஆனால் சிறுவனின் பெற்றோரான புஷ்பராஜ்-ரேணுகாதேவி தம்பதியினா் வறுமையில் வாடுவதால் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனா்.


அங்கு முதல்-அமைச்சா் மருத்துவ காப்பீட்டு திட்டம் காா்டு இருந்தால் சிறுவனுக்கான சிகிச்சையை இலவசமாக செய்யலாம் என்று கூறினா். ஆனால் மருத்துவ காப்பீடு காா்டு இல்லை. தற்போது கோவிலம்பாக்கத்துக்கு வீடு மாற்றி சென்று விட்டதால் ரேஷன் காா்டும் இல்லை என கூறப்படுகிறது.

அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை

இந்தநிலையில் தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் நேற்று காலை சென்னையில் இருந்து திருச்சி சென்றாா். இதற்காக அவர் சென்னை உள்நாட்டு விமான நிலையம் வந்தார். இதையறிந்த சிறுவனின் பெற்றோர், சென்னை விமான நிலையத்துக்கு சென்று அமைச்சரை சந்தித்து தங்களது 10 வயது மகனின் சிறுநீரக நோய் சிகிச்சைக்கு உதவும்படி கோரிக்கை விடுத்தனர்.

அவற்றை விளக்கமாக கேட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன், உடனடியாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகளுக்கு பரிந்துரைத்து சிறுவனுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யும்படி கூறினாா். அத்துடன் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனை தலைமை மருத்துவரை செல்போனில் தொடா்பு கொண்டு பேசிய அவர், சிறுவன் நவீனுக்கு உடனடியாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கவும் வழிவகை செய்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. போராட்டம் நடத்தும் நர்சுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த குழு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
தமிழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நர்சுகளுடன் கலந்து பேசி 15 நாட்களில் தீர்வு காண 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
2. மக்களின் கோரிக்கையை ஏற்று கோவில்கள் திறப்பு அமைச்சர் சேகர்பாபு பேட்டி
கோவில்களை வைத்து அரசியல் செய்யக்கூடாது என்றும், மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப கோவில்கள் திறக்கப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
3. மத்திய அரசு அனுமதி அளித்தவுடன்: 2 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி அமைச்சர் தகவல்
மத்திய அரசு அனுமதி அளித்தவுடன் 2 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
4. தமிழகத்தில் 3 ஆயிரம் பேருக்கு டெங்கு பாதிப்பு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
தமிழகத்தில் கடந்த ஜனவரி முதல் 3 ஆயிரத்து 90 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது எனவும், இதில் 362 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
5. தமிழகத்தில் நிலக்கரி பற்றாக்குறை இல்லை அமைச்சர் தகவல்
தமிழகத்தில் நிலக்கரி பற்றாக்குறை இல்லை அமைச்சர் தகவல்.