தமிழக நிதிநிலை வெள்ளை அறிக்கை: வெற்றி இலக்கை அடையும் நம்பிக்கையை தருகிறது கி.வீரமணி பாராட்டு


தமிழக நிதிநிலை வெள்ளை அறிக்கை: வெற்றி இலக்கை அடையும் நம்பிக்கையை தருகிறது கி.வீரமணி பாராட்டு
x
தினத்தந்தி 10 Aug 2021 6:15 PM GMT (Updated: 10 Aug 2021 6:15 PM GMT)

தமிழக நிதிநிலை வெள்ளை அறிக்கை: வெற்றி இலக்கை அடையும் நம்பிக்கையை தருகிறது கி.வீரமணி பாராட்டு.

சென்னை,

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தின் நிதிநிலை பற்றிய வெள்ளை அறிக்கை ஒன்றை புதிதாக பொறுப்பேற்றுள்ள தி.மு.க. ஆளுமையான தமிழ்நாடு அரசு வெளியிடும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெள்ளை அறிக்கையை வெளியிட்டு தெளிவான விளக்கத்தையும் அளித்திருக்கிறார்.

தேவையற்ற செலவினங்கள், ஆக்கப்பூர்வ முதலீடு போன்ற செலவினங்களுக்கு கடன் வாங்கினால் அது ஏற்கத்தக்கது. பழைய கடனின் வட்டியைக் கட்ட, புதிய கடனை வாங்குதல், தவறான வழிச்செலவு முறை என்பதற்கான புள்ளி விவரங்களை இந்த அறிக்கை தெளிவாகக் கூறுகின்றது. கடன் வாங்குவது, செலவழிப்பது, வட்டி கட்டுவது, மீண்டும் கடன் வாங்குவது போன்ற இந்த நிலைகளை உடைத்து மாற்றிடும் வகையில், 5 ஆண்டுகளில் தி.மு.க. அரசு வெற்றி இலக்கை அடையும் என்ற நம்பிக்கையை அளித்துள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story