செல்பி மோகம்: நேப்பியர் பலத்தில் தவறி விழுந்த இளைஞர்: விடிய விடிய தத்தளித்த பரிதாபம்


செல்பி மோகம்: நேப்பியர் பலத்தில் தவறி விழுந்த இளைஞர்: விடிய விடிய தத்தளித்த பரிதாபம்
x
தினத்தந்தி 11 Aug 2021 9:55 AM GMT (Updated: 2021-08-11T15:25:22+05:30)

நேப்பியர் பலத்தில் செல்பி எடுக்கும்போது இளைஞர் ஒருவர் தவறி விழுந்தார். விடிய விடிய தத்தளித்த பின் காலையில் அவரை போலீசார் மீட்டனர்.

சென்னை,

சென்னை நேப்பியர் பலத்தில் செல்பி எடுக்கும்போது தவறி விழுந்த இளைஞர், கூவம் ஆற்றில் விடிய விடிய தத்தளித்த நிலையில் இன்று காலை போலீசார் மீட்டுள்ளனர்.

நேற்று இரவு 10 மணியளவில் பெரியமேட்டைச் சேர்ந்த கார்த்தி என்பவர், நேப்பியர் பாலத்திற்கு முன்பு நின்று தனது செல்போனில் செல்பி எடுக்க முயன்றபோது, கூவம் ஆற்றில் தவறி விழுந்துள்ளார். அவர் விழுந்ததை அந்த நேரத்தில் யாரும் கவனிக்கவில்லை. செல்போனும் நீரில் விழுந்ததால் யாரையும் உதவிக்கு அழைக்க முடியவில்லை. இதனால், சேற்றில் சிக்கிய கார்த்தி தட்டுத்தடுமாறி வந்து நேப்பியர் பாலத்தின் கீழே நின்றுள்ளார். 

காலை பாலத்திற்கு கீழ் ஒருவர் கூச்சலிடும் சத்தம் கேட்ட பொதுமக்கள், அண்ணா சதுக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து, போலீசார் கயிறு மூலம் கார்த்தியை பத்திரமாக மீட்டனர்.

Next Story