‘நெட்' தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் அக்டோபர் 6-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை தேர்வு நடக்கிறது


‘நெட்  தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் அக்டோபர் 6-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை தேர்வு நடக்கிறது
x
தினத்தந்தி 11 Aug 2021 7:26 PM GMT (Updated: 11 Aug 2021 7:26 PM GMT)

‘நெட்' தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் அக்டோபர் 6-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை தேர்வு நடக்கிறது.

சென்னை,

கல்லூரி உதவி பேராசிரியர்கள் பணிக்கான பல்கலைக்கழக மானியக்குழுவின் தேசிய தகுதி தேர்வு (‘நெட்' தேர்வு) ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடத்தப்பட இருந்த தேர்வு கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்தும் நோய்த்தொற்றின் தாக்கம் குறையாததால் மே மாதம் நடத்தப் படுவதாக அறிவிக்கப்பட்ட தேர்வும் தள்ளிவைக்கப்பட்டது.

இந்தநிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மற்றும் கடந்த ஜூன் மாதத்துக்கான ‘யு.ஜி.சி. நெட்' தேர்வு வருகிற அக்டோபர் மாதம் 6-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை நடைபெற இருப்பதாக ‘நெட்' தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை அறிவித்து இருக்கிறது.

அதன்படி, இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க அடுத்த மாதம் (செப்டம்பர்) 5-ந்தேதி கடைசி நாள் ஆகும். கணினி அடிப்படையிலான தேர்வாக ஒவ்வொரு நாளும் காலை 9 மணி முதல் பிற்பகல் 12 மணிவரையில் முதல் ஷிப்டு, பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை 2-வது ஷிப்டு அடிப்படையிலும் தேர்வு நடக்க இருக்கிறது. இதுதொடர்பான தகவல்களுக்கு ugcnet.nta.nic.in, www.nta.ac.inஎன்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

Next Story