தமிழகத்தில் பஸ் கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் தற்போது இல்லை - அமைச்சர் ராஜகண்ணப்பன் பேட்டி


தமிழகத்தில் பஸ் கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் தற்போது இல்லை - அமைச்சர் ராஜகண்ணப்பன் பேட்டி
x
தினத்தந்தி 12 Aug 2021 5:15 AM GMT (Updated: 12 Aug 2021 9:33 AM GMT)

தமிழகத்தில் பஸ் கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் தற்போது இல்லை என்று போக்குவரத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறினார்.

சென்னை,

சென்னை மேற்கு சைதாப்பேட்டை – செங்கல்பட்டுக்கு மீண்டும் அரசு பஸ் சேவை தொடங்கியுள்ளது. இரண்டு அரசு பேருந்துகளின் சேவையை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியதாவது:-

தமிழகத்தில் பேருந்து கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் தற்போது இல்லை. திமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை இனி புதுப்பொலிவு பெறும். பழைய பேருந்துகள் அகற்றப்பட்டு 2,500 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும். 

பேருந்து நிலையங்களில் மீண்டும் அம்மா குடிநீர் பாட்டில் விற்க நடவடிக்கை எடுக்கப்படும். நிதி சுமை பற்றி நாங்கள் கவலைப்படவில்லை, மக்களின் சேவைக்காக தொடர்ந்து செயல்படுவோம். வண்டலூர் அருகே கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையம் இந்த ஆட்சி காலத்தில் கட்டி முடிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story