திருச்சியில் புதிய பேருந்து நிலையம், வணிக வளாகம் - பழனிவேல் தியாகராஜன்


திருச்சியில் புதிய பேருந்து நிலையம், வணிக வளாகம் - பழனிவேல் தியாகராஜன்
x
தினத்தந்தி 13 Aug 2021 6:06 AM GMT (Updated: 13 Aug 2021 6:06 AM GMT)

27 நகரங்களில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும்; அனைத்து நகரங்களிலும் திடக்கழிவு மேலாண்மை ஏற்படுத்தப்படும் என பழனிவேல் தியாகராஜன்

சென்னை
 
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, இன்று சட்டப் பேரவையில் தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக்கான முழுமையான திருத்திய நிதிநிலை அறிக்கை (பட்ஜெட் தாக்கல்) இன்று செய்யப்பட்டு வருகிறது.  தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார்.  அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

*  திருச்சியில் புதிய பேருந்து நிலையம், வணிக வளாகம் ஏற்படுத்தப்படும்

* 27 நகரங்களில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும்; அனைத்து நகரங்களிலும் திடக்கழிவு மேலாண்மை ஏற்படுத்தப்படும்

* சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.20,000 கோடி கடன் வழங்கப்படும்

* குக்கிராமங்களை மேம்படுத்த ரூ.1,200 கோடி செலவில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 

* சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ.3 கோடி மீண்டும் வழங்கப்படும்

என கூறினார்.

Next Story