மதுரையில் மெட்ரோ ரெயில் திட்டம் அமைக்க அறிக்கை தயார் செய்யப்படும் - பழனிவேல் தியாகராஜன்


மதுரையில் மெட்ரோ ரெயில் திட்டம் அமைக்க அறிக்கை தயார் செய்யப்படும் - பழனிவேல் தியாகராஜன்
x
தினத்தந்தி 13 Aug 2021 6:37 AM GMT (Updated: 13 Aug 2021 7:01 AM GMT)

சிஎம்டிஏ போன்று மதுரை, கோவை, திருப்பூர், ஓசூரிலும் நிறுவப்படும்; தமிழ்நாடு வீட்டு வசதித்துறை, உலக வங்கியின் நிதியுதவியுடன் மேம்படுத்தப்படும் என அமைச்சர் பழனிவேல் ராஜன் கூறினார்.

சென்னை

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, இன்று சட்டப் பேரவையில் தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக்கான முழுமையான திருத்திய நிதிநிலை அறிக்கை (பட்ஜெட் தாக்கல்) இன்று செய்யப்பட்டு வருகிறது.  தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார்.  அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

தனித்துவமான மாநில கல்விக்கொள்கையை வகுக்க கல்வியாளர்களைக் கொண்ட உயர்மட்டக் குழு அமைக்கப்படும்;  பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.32,599 கோடி நிதி ஒதுக்கீடு”

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் நிதிநிலைமை சீரமைக்கப்படும்; மின்சாரத்துறைக்கு ரூ.19,872 கோடி ஒதுக்கீடு

கோடம்பாக்கம் - பூந்தமல்லி இடையே மெட்ரோ ரயில் சேவை 2025-ல் தொடங்கப்படும்

தமிழ்நாடு மின்மிகை மாநிலம் என்ற கூற்று தவறானது; 2,500 மெகாவாட் மின்சாரம் மின் சந்தையிலிருந்து வாங்கப்படுகிறது.

மதுரையில் மெட்ரோ ரெயில் திட்டம் அமைக்க அறிக்கை தயார் செய்யப்படும். 

மகளிர், மாற்றுத்திறனாளிகள் இலவச பயணத்திற்காக ரூ.750 கோடி டீசல் மானியம் 

623 கோடியில் 1,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும்

நெடுஞ்சாலை துறைக்கு ரூ.17,899 கோடி ஒதுக்கீடு; புறவழிச்சாலைகள் இல்லாத 59 நகராட்சிகளுக்கு புறவழிச்சாலைகள் ஏற்படுத்தப்படும்

குடிசை மாற்று வாரியத்திற்கு ரூ.3,954 கோடி நிதி ஒதுக்கீடு; குடிசைகள் இல்லாத தமிழ்நாட்டை அமைப்பதில் அரசு உறுதி

 நகர்ப்புற ஏழைகளுக்காக நகர்ப்புற ஊதிய வேலைவாய்ப்பு திட்டம் தொடங்கப்படும் 

சிஎம்டிஏ போன்று மதுரை, கோவை, திருப்பூர், ஓசூரிலும் நிறுவப்படும்; தமிழ்நாடு வீட்டு வசதித்துறை, உலக வங்கியின் நிதியுதவியுடன் மேம்படுத்தப்படும். 

பொது சொத்து பராமரிப்பு பணிக்காக வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் திட்டத்துக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு

அடுத்த 5 ஆண்டுகளில் 8 லட்சம் குடும்பங்களுக்கு வீடு: நிதி அமைச்சர்

சென்னை பொது இடங்களில் சுவரொட்டிகள் இல்லாத நகரமாக மாற்றப்படும்
என கூறினார்.

Next Story