மாநில செய்திகள்

திமுக மீது உள்ள மக்களின் நம்பிக்கை எப்போதும் நிலைத்திருக்க விரும்புகிறேன்- முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் + "||" + I want the people's faith in the DMK to last forever

திமுக மீது உள்ள மக்களின் நம்பிக்கை எப்போதும் நிலைத்திருக்க விரும்புகிறேன்- முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின்

திமுக மீது உள்ள மக்களின் நம்பிக்கை எப்போதும் நிலைத்திருக்க விரும்புகிறேன்- முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின்
திமுகவிற்கு வாக்களிக்காதவர்கள் கூட இப்போது தேர்தல் நடந்தால் திமுகவிற்கு வாக்களிக்க தயாராக உள்ளனர் என்று மு.க ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை,

தமிழக சட்டப்பேரவையில் இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்த பின்பு முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் சட்டப்பேரவையில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:- திமுக ஆட்சிக்கு வந்து இன்றுடன் 100 நாட்கள் நிறைவு பெற்றுள்ளது. திமுக ஆட்சியையும் என்னையும் பாராட்டி பேசியவர்களுக்கு நன்றி. அடுத்து வரும் நாட்களைப் பற்றி சிந்தனை எனக்கு அதிகம் ஏற்பட்டுள்ளது. 

திமுகவிற்கு வாக்களிக்காதவர்கள் கூட இப்போது தேர்தல் நடந்தால் திமுகவிற்கு வாக்களிக்க தயாராக உள்ளனர். திமுக மீது உள்ள மக்களின் நம்பிக்கை எப்போதும் நிலைத்திருக்க விரும்புகிறேன். தேர்தல் வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றி வருகிறது அரசு.சொன்னதை செய்வோம்..செய்வதை சொல்வோம் என்ற வகையில் செயல்பட்டு வருகிறோம். இந்த 100 நாட்களில் ஏராளமான சாதனைகளை திமுக அரசு செய்துள்ளது. இழந்த பெருமைகளை மீட்டெடுக்க நம்மால் முடியும் என்ற நம்பிக்கை 100 நாளில் ஏற்பட்டுள்ளது” என்றார். 


தொடர்புடைய செய்திகள்

1. போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்கது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்கது என முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
2. ஊரக உள்ளாட்சி தேர்தல்: திமுகவில் இன்று முதல் விருப்ப மனு
ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் இன்று முதல் விருப்ப மனு அளிக்கலாம் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.
3. மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தமிழகத்தில் காலியாக உள்ள 2 மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
4. தனுஷ் என்ற மாணவரின் தற்கொலைக்கு அரசுதான் பொறுப்பு: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
தனுஷ் என்ற மாணவரின் தற்கொலைக்கு அரசுதான் பொறுப்பு என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
5. பாரதியார் உருவப்படத்திற்கு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு தினத்தையொட்டி பாரதியார் உருவப்படத்திற்கு முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.