சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்


சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
x
தினத்தந்தி 15 Aug 2021 1:31 AM GMT (Updated: 15 Aug 2021 1:31 AM GMT)

சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.99.47-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை,

பெட்ரோல், டீசல் விலையை பொறுத்தவரையில் தினசரி விலை நிர்ணயம் என்ற நடைமுறை வந்ததில் இருந்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. அதன்படி, இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து அதன் விலை தாறுமாறாக உயர்ந்து கொண்டே வருகிறது.

பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலை நூறு ரூபாயைக் கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து உயரும் பெட்ரோல், டீசல் விலையால் வாகன ஓட்டிகள் கலக்கமடைந்துள்ளனர். 

இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பை அடுத்து, பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு, நேற்று காலை முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ 99.47-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ 94.39-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை மாற்றப்படவில்லை. இன்றைய தினம் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ 99.47-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ 94.39-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Next Story