75-வது சுதந்திர நினைவு தூணை திறந்து வைத்தார் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின்


75-வது சுதந்திர நினைவு தூணை திறந்து  வைத்தார் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின்
x
தினத்தந்தி 15 Aug 2021 4:54 AM GMT (Updated: 15 Aug 2021 4:54 AM GMT)

75-வது சுதந்திர நினைவு தூணை முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னை,

இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழாவை நினைவுபடுத்தும் வகையில் சுதந்திர தின நினைவுத் தூண் அமைக்கப்படும் என்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் அறிவித்தார். அதையடுத்து அதற்கான இடம் சென்னை காமராஜர் சாலையில் நேப்பியர் பாலம் அருகே தேர்வு செய்யப்பட்டது. அதையடுத்து டெண்டர் விடப்பட்டு, ரூ.1.94 கோடி நிதி ஒதுக்கீடு செய்து கடந்த 3-ம் தேதி பணிகள் தொடங்கியது.

முதல்வர் உத்தரவின்பேரில் பொதுப்பணித் துறை அதிகாரிகள் கண்காணிப்பில் சுதந்திர தின நினைவுத் தூண் அமைக்கும் பணிகள் இரவு, பகலாக நடைபெற்று வந்தன.  இந்த நிலையில், 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு முதல் அமைச்சர் மு. க ஸ்டாலின் நினைவுத்தூணை திறந்து வைத்தார்.  நினைவுத்தூணில்  5 அடி உயரத்தில் 4 தலையுடன் கூடிய சிங்க முகம், 8 அடி உயர அசோக சக்கரம் பொருத்தப்பட்டுள்ளது.  துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்களின் சிலைகள் நினைவு தூணில் அமைக்கப்பட்டுள்ளது. 


Next Story