மாநில செய்திகள்

தொண்டர்களைத்தான் எனக்கு துணையாக ஜெயலலிதா விட்டு சென்றுள்ளார்: சசிகலா + "||" + Jayalalithaa has left volunteers to accompany me: Sasikala

தொண்டர்களைத்தான் எனக்கு துணையாக ஜெயலலிதா விட்டு சென்றுள்ளார்: சசிகலா

தொண்டர்களைத்தான் எனக்கு துணையாக ஜெயலலிதா விட்டு சென்றுள்ளார்: சசிகலா
சசிகலா, தினமும் தொண்டர்களுடன் தொலைபேசியில் உரையாடி வருகிறார். இந்த ஆடியோ பதிவுகள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பையும் ஏற்படுத்தி வருகின்றன. அந்தவகையில் தூத்துக்குடியை சேர்ந்த ரூபம் வேலவன் என்ற தொண்டரிடம் சசிகலா நேற்று பேசியுள்ளார்.
அதன் விவரம் வருமாறு:-

தொண்டர்:- உங்கள் பிறந்தநாளில் (ஆகஸ்டு 18-ந்தேதி) உங்களை சந்திக்க நினைத்தோம். முடியவில்லை அம்மா.

சசிகலா:- தற்போது கொரோனா காலம் என்பதால், உங்களது பகுதிகளிலேயே ஏதாவது பூஜை செய்யுங்கள், ஏழை மக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கி உதவுங்கள். எனக்காக மட்டுமல்ல, அனைத்து மக்களுக்காகவும் கடவுளை வேண்டுங்கள். அதுவே எனக்கு பெரிய மகிழ்ச்சியாக அமையும்.

தொண்டர்களைத்தான் எனக்கு துணையாக அம்மா (ஜெயலலிதா) விட்டு சென்றிருக்கிறார். எனவே எல்லாமே நல்லதாகவே நடக்கும். இதுவரை என் பிறந்தநாளை அம்மாவுடன்தான் கொண்டாடியுள்ளேன். எனவேதான் இப்போதெல்லாம் பிறந்தநாள் கொண்டாடவே ஆசை வருவதில்லை. ஆகவே எனது பிறந்தநாளை கொண்டாட விரும்பும் தொண்டர்கள், ஏழை மக்களுக்கு உதவிகள் புரிந்து கொண்டாடுங்கள் என்று கூறுகிறேன்.

இப்போதுள்ள சூழலில் ஊரடங்கை மதிக்கவேண்டும். கொரோனா பாதிப்பு குறைந்து மக்கள் வாழ்க்கை நல்ல நிலைக்கு வரவேண்டும். அதுதான் எனக்கு முக்கியம். கொரோனா பாதிப்பு குறைந்ததும் தொண்டர்களை சந்திக்க வருவேன். அ.தி.மு.க.வின் 3-ம் தலைமுறை தலைவராக நான் வரவேண்டும் என்பது தொண்டர்களின் விருப்பம். தொண்டர்களின் சந்தோஷமே என் சந்தோஷம்.

இவ்வாறு அந்த உரையாடலில் சசிகலா பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஜெயலலிதா பயன்படுத்திய உண்மையான பொருட்கள் இல்லை: தீபா பரபரப்பு பேட்டி
வேதா இல்லத்தில் அனைத்தும் மாற்றப்பட்டுள்ளதாகவும், ஜெயலலிதா வாழ்ந்ததற்கான எந்த ஒரு அடையாளமும் இல்லை என ஜெ.தீபா குற்றம்சாட்டியுள்ளார்.
2. அதிமுகவில் சசிகலா, தினகரனை இணைப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை - கடம்பூர் ராஜு
அதிமுகவில் இனி இரட்டை தலைமைதான் என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
3. ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா மரியாதை...
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா மரியாதை செலுத்தினார்.
4. ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை என்ன செய்ய திட்டம். ...?ஜெ.தீபா பரபரப்பு பேட்டி
ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை அரசுடைமையாக்கிய சட்டம் செல்லாது என்று சென்னை ஐகோர்ட்டு வழங்கியிருக்கும் தீர்ப்புக்கு ஜெ.தீபா வரவேற்பு தெரிவித்துள்ளார். மேலும் மேல்முறையீடு செய்தாலும் சட்டரீதியாக சந்திப்போம் என அவர் கூறியுள்ளார்.
5. விரைவில் அனைவரையும் நேரில் சந்திப்பேன் சசிகலா தொண்டர்களுக்கு கடிதம்
விரைவில் அனைவரையும் நேரில் சந்திக்க இருப்பதாக அ.தி.மு.க பொதுச்செயலாளர் என சசிகலா குறிப்பிட்டு தொண்டர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார்.