மாநில செய்திகள்

ஆன்லைன் ரம்மி தடைக்கு தமிழக அரசு 6 மாதத்தில் சட்டம் இயற்றும் என நம்புகிறோம் - மதுரை ஐகோர்ட்டு கிளை கருத்து + "||" + Madurai High court insists TN govt to enact law to ban online rummy in 6 months

ஆன்லைன் ரம்மி தடைக்கு தமிழக அரசு 6 மாதத்தில் சட்டம் இயற்றும் என நம்புகிறோம் - மதுரை ஐகோர்ட்டு கிளை கருத்து

ஆன்லைன் ரம்மி தடைக்கு தமிழக அரசு 6 மாதத்தில் சட்டம் இயற்றும் என நம்புகிறோம் - மதுரை ஐகோர்ட்டு கிளை கருத்து
ஆன்லைன் ரம்மி தடைக்கு 6 மாதங்களுக்குள் புதிய சட்டத்தை தமிழக அரசு கொண்டு வரும் என நம்புவதாக மதுரை ஐகோர்ட்டு கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மதுரை,

மதுரையைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், கொரோனா ஊரடங்கு காலத்தில் இந்தியாவில் இணையதள சேவைகஐ பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 24 சதவீதம் அதிகரித்துள்ளது. 

இந்த சூழலில் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பல இளைஞர்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் பல இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டு வருகின்றனர். எனவே தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய உத்தரவிட வேண்டும் என மனுதாரர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இன்று நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த வழக்கு தொடர்பான உத்தரவை இன்று வெளியிட்டது. அதில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தவுடன், தமிழக அரசு விரைவாக செயல்பட்டு ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்திருந்தது. தொடர்ந்து ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில் தொடரப்பட்ட மேல் முறையீட்டு வழக்கில், தமிழக அரசு விதித்த தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

பின்னர், தமிழக சட்டத்துறை அமைச்சர் உரிய வழிகாட்டுதலோடு விரைவில் புதிய சட்டம் கொண்டுவரப்படும் என ஊடகங்களில் தெரிவித்திருந்தார். பல உயிர்கள் இது போன்ற தளங்களால் பறிபோகின்றன. ஆகவே தமிழக அரசு விரைவாக நடவடிக்கை எடுக்கும் என நீதிமன்றம் நம்புகிறது. ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் நீதிமன்றம் வழங்கிய அறிவுறுத்தல்களையும் கருத்தில் கொண்டு 6 மாதங்களுக்குள்ளாக புதிய சட்டத்தை தமிழக அரசு கொண்டு வரும் என நீதிமன்றம் நம்புகிறது என குறிப்பிட்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. விஜயதசமியன்று கோவில்களை திறக்க வாய்ப்புள்ளதா? - தமிழக அரசு விளக்கமளிக்க உத்தரவு
தமிழகத்தில் விஜயதசமி அன்று கோயில்களை திறக்க வாய்ப்புள்ளதா என்பது குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
2. ரவுடிகளை ஒடுக்க புதிய சட்டம் கொண்டு வருவது மகிழ்ச்சி; தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு பாராட்டு
ரவுடிகளை ஒடுக்க ஒருங்கிணைந்த குற்றத்தடுப்பு சட்டத்தை கொண்டு வருவது மகிழ்ச்சி அளிப்பதாகவும், இதற்காக தமிழக அரசை பாராட்டுவதாகவும் சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
3. 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நவ.1 முதல் பள்ளிகள் திறப்பு
தமிழகத்தில் வரும் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் 1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
4. காவிரி நீரை கர்நாடகா முறையாக வழங்கவில்லை; தமிழக அரசு குற்றச்சாட்டு
காவிரி நீரை கர்நாடகா முறையாக வழங்கவில்லை என காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழக அரசு குற்றம் சாட்டியுள்ளது.
5. அக்டோபர் 2ஆம் தேதி கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு அனுமதி
அக்டோபர் 2 ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.