மாநில செய்திகள்

தமிழக அரசு மானியம் வழங்கி சமையல் எரிவாயு விலையை கட்டுக்குள் கொண்டு வரவேண்டும்: டாக்டர் ராமதாஸ் + "||" + Tamil Nadu Government should provide subsidy and bring the price of cooking gas under control: Dr. Ramadass

தமிழக அரசு மானியம் வழங்கி சமையல் எரிவாயு விலையை கட்டுக்குள் கொண்டு வரவேண்டும்: டாக்டர் ராமதாஸ்

தமிழக அரசு மானியம் வழங்கி சமையல் எரிவாயு விலையை கட்டுக்குள் கொண்டு வரவேண்டும்: டாக்டர் ராமதாஸ்
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
வீட்டு பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விலை ரூ.850-லிருந்து ரூ.875 ஆக உயர்த்தப்பட்டிருப்பது எந்த வகையிலும் நியாயமற்றது. கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்துள்ள ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களை கடுமையாக பாதிக்கக்கூடியதாகும். கடந்த 6 மாதங்களில் சமையல் எரிவாயு விலை ரூ.710-லிருந்து ரூ.165, அதாவது 23 சதவீதம் உயர்த்தப்பட்டிருக்கிறது. சமையல் எரிவாயு என்ற அத்தியாவசிய பொருளின் விலையை ஆண்டுக்கு 46 சதவீதம் என்ற அளவுக்கு உயர்த்துவது நியாயமா? என எண்ணெய் நிறுவனங்கள் சிந்திக்க வேண்டும்.

சமையல் எரிவாயு விலையை குறைக்கும்படி எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஆணையிடவேண்டும்; தமிழக அரசும் அதன் பங்குக்கு ரூ.100 மானியம் வழங்கி சமையல் எரிவாயு விலையை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. எதிர்கால மின்சாரத் தேவையை சமாளிக்க திட்டங்களை வகுத்து செயல்படுத்த வேண்டும் - தமிழக அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
எதிர்கால மின்சாரத் தேவையை சமாளிக்க திட்டங்களை வகுத்து செயல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
2. ‘‘பா.ம.க. தலைமையில்தான் இனிமேல் கூட்டணி’’ - சிறப்பு செயற்குழுவில் டாக்டர் ராமதாஸ் பேச்சு
‘‘இனி நமது தலைமையில் தான் கூட்டணி. வேறு யாருடனும் கூட்டணி இனி கிடையாது’’ என்று டாக்டர் ராமதாஸ் உருக்கமாக பேசினார்.
3. விஜயதசமியன்று கோவில்களை திறக்க வாய்ப்புள்ளதா? - தமிழக அரசு விளக்கமளிக்க உத்தரவு
தமிழகத்தில் விஜயதசமி அன்று கோயில்களை திறக்க வாய்ப்புள்ளதா என்பது குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
4. புலம்பெயர் தமிழர் நலவாரியம் அமைக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது - டாக்டர் ராமதாஸ்
புலம்பெயர் தமிழர் நலவாரியம் அமைக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
5. வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியதில் அரசியல் உள்நோக்கம் இல்லை - ஐகோர்ட்டில் டாக்டர் ராமதாஸ் பதில் மனு
வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கியதில் அரசியல் எதுவும் இல்லை என்றும், இந்த இடஒதுக்கீட்டால் யாருக்கும் பாதிப்பும் இல்லை என்றும் சென்னை ஐகோர்ட்டில் டாக்டர் ராமதாஸ் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.