கோவையிலும் மெட்ரோ ரெயில் கொண்டுவர வலியுறுத்தப்படும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


கோவையிலும் மெட்ரோ ரெயில் கொண்டுவர வலியுறுத்தப்படும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 18 Aug 2021 7:29 AM GMT (Updated: 18 Aug 2021 7:29 AM GMT)

கோவையில் மெட்ரோ திட்டம் கொண்டுவரப்படுமா என பா.ஜ.க. எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் எழுப்பிய கேள்விக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார்.

சென்னை

சட்டமன்றத்தில் பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட்  மீதான மூன்றாம் நாள் விவாதம் இன்று நடைபெற்றது. 

சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவர மத்திய அரசை வலியுறுத்துவோம் என தெரிவித்துள்ளார்.

கோவையில் மெட்ரோ திட்டம் கொண்டுவரப்படுமா என பா.ஜ.க. எம்.எல் ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பினர்.

அவர் கேள்விக்கு பதிலளித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறும் போது 

கோவைக்கு மெட்ரோ திட்டம் கொண்டுவர மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். மெட்ரோ திட்டத்தை பொறுத்தவரை மத்திய அரசின் நிதியை பெற்று தான் பணிகள் நிறைவேற்ற முடியும்.

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டத்திற்கான மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்துள்ளது. கோவை மட்டுமின்றி மதுரைக்கும் மெட்ரோ ரெயில் திட்டம் நிறைவேற்றப்படும் எனத் தெரிவித்தார்.

Next Story