மாநில செய்திகள்

மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்தது + "||" + Water supply to Mettur Dam is low

மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்தது

மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்தது
மேட்டூர் அணைக்கு நேற்று 4,379 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 4,023 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.
சேலம்,

சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணைக்கு கர்நாடகாவில் உள்ள கபினி அணை மற்றும்  கிருஷ்ணாராஜா சாகர் அணை ஆகியவற்றிலிருந்து நீர் பெறப்படுகிறது. தென்மேற்கு பருவமழை காரணமாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்தது.

தற்போது நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு குறைந்துள்ளதையடுத்து, அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. காவிரியில் தற்போது 7 ஆயிரம் கன அடி மட்டுமே திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது.

மேட்டூர் அணைக்கு நேற்று 4 ஆயிரத்து 379 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 4 ஆயிரத்து 23 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரியில் 12 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 700 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.

அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. நேற்று 69 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் ஒரு அடி சரிந்து 68.09 அடியாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 10,559 கன அடியாக சரிவு
இன்றைய நிலவரப்படி மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 15,409 கன அடியில் இருந்து 10,559 கன அடியாக குறைந்துள்ளது.
2. மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கான நீர் திறப்பு குறைப்பு
மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.
3. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 72.68 அடியாக குறைவு
மேட்டூர் அணையில் நீர்திறப்பு வினாடிக்கு 12 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
4. மேட்டூர் அணையின் நீர்வரத்து 9 ஆயிரம் கன அடியாக சரிவு
மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 10,164 கன அடியில் இருந்து 9,007 கன அடியாக குறைந்துள்ளது.
5. மேட்டூர் அணையின் நீர்வரத்து 10 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு
மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 9,875 கன அடியில் இருந்து 10,164 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.