பள்ளிக்கூடங்களை திறக்க பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு


பள்ளிக்கூடங்களை திறக்க பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
x
தினத்தந்தி 18 Aug 2021 10:32 AM GMT (Updated: 2021-08-18T16:02:13+05:30)

செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9 முதல் 12 வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க உத்தேச தேதியை தமிழக அரசு அறிவித்தது இருந்தது.

சென்னை

தமிழகத்தில் செப்டம்பர் 1 -ந்தேதி முதல் பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் பின்பற்றப்பட வேண்டிய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக மக்கள் நல்வாழ்வு துறை வெளியிட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக 2020 மார்ச் மாதம் முதல் பள்ளிக்கூடங்கள்  அனைத்தும் மூடப்பட்டன. இந்நிலையில், கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் மீண்டும் பள்ளிகள் திறப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை பல்வேறு தரப்பினரிடையே ஆலோசனை மேற்கொண்டது.

அதன் அடிப்படையில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9 முதல் 12 வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க உத்தேச தேதியை தமிழக அரசு அறிவித்தது இருந்தது.

இந்நிலையில், பள்ளிகள் திறக்கப்பட்டால் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை மாநில மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை இன்று வெளியிட்டுள்ளது.

Next Story