மாநில செய்திகள்

நடிகை மீரா மிதுன் ஜாமீன் கோரி மனு தாக்கல்; சென்னை கோர்ட்டில் இன்று விசாரணை + "||" + Actress Meera Mithun files bail petition Trial in Chennai Court today

நடிகை மீரா மிதுன் ஜாமீன் கோரி மனு தாக்கல்; சென்னை கோர்ட்டில் இன்று விசாரணை

நடிகை மீரா மிதுன் ஜாமீன் கோரி மனு தாக்கல்; சென்னை கோர்ட்டில் இன்று விசாரணை
நடிகை மீரா மிதுன் ஜாமீன் கோரி சென்னை கோர்ட்டில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணை வருகிறது.
சென்னை,

நடிகை மீரா மிதுன் தாழ்த்தப்பட்டவர்கள் பற்றி அவதூறு கருத்துகளை ‘யூடியூப்’பில் வெளியிட்டதாக புகார் கூறப்பட்டது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த சென்னை சைபர் கிரைம் போலீசார், மீரா மிதுன், அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்தநிலையில் மீராமிதுனும், அவரது நண்பரும் ஜாமீன் கோரி சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

அந்த மனுவில், 'என்னை பற்றி அவதூறு செய்தி பரப்பியதால் ஏற்பட்ட மன உளைச்சலால் பட்டியலின சமுதாயத்தை பற்றி தவறாக பேசி விட்டேன். அது தவறு என தெரிந்ததும், அவ்வாறு பேசியதற்கு வருத்தம் தெரிவித்தேன். பட்டியலின மக்களோடு நட்புடன் இருந்து வருகிறேன். பல படங்களில் நடிப்பதற்கு கால்ஷீட் கொடுத்துள்ள நிலையில் என்னை கைது செய்துள்ளதால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும்' என்று கூறி உள்ளார்.

இந்த மனு இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பருக்கு நிபந்தனை ஜாமின்
நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2. நடிகை மீரா மிதுன் மீது பதிவு செய்யப்பட்ட 2 வழக்குகளில் ஜாமின் வழங்கியது எழும்பூர் நீதிமன்றம்
நடிகை மீரா மிதுன் மீது பதிவு செய்யப்பட்ட 2 வழக்குகளில் எழும்பூர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.
3. நடிகை மீரா மிதுன் மீது பதிவு செய்யப்பட்ட 2வது வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்
நடிகை மீரா மிதுன் மீது பதிவு செய்யப்பட்ட 2வது வழக்கில் 30 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
4. மீரா மிதுனின் நண்பர் அபிஷேக் ஷாம் கைது
கேரளாவில் கைதான நடிகை மீரா மிதுன் சென்னை அழைத்து வரப்பட்டார். போலீசாரின் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
5. நடிகை மீரா மிதுன் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு
நடிகை மீரா மிதுன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.