தமிழகம், புதுச்சேரியில் உள்ள கடற்படை தளத்தை சுற்றி 3 கி.மீ. சுற்றளவில் ஆளில்லா விமானம் பறக்க தடை; பாதுகாப்புத்துறை உத்தரவு


தமிழகம், புதுச்சேரியில் உள்ள கடற்படை தளத்தை சுற்றி 3 கி.மீ. சுற்றளவில் ஆளில்லா விமானம் பறக்க தடை; பாதுகாப்புத்துறை உத்தரவு
x
தினத்தந்தி 19 Aug 2021 5:01 AM GMT (Updated: 19 Aug 2021 5:01 AM GMT)

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள கடற்படை மையங்களைச் சுற்றி 3 கிலோ மீட்டர் சுற்றளவு பகுதிகள் பறக்க அனுமதியில்லாத பகுதி என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே இந்த பகுதிகளில் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் ஆளில்லா விமானங்கள் அல்லது வான்வழி வாகனங்கள் பறக்க தடை செய்யப்பட்டு உள்ளது.

எந்த முன் அனுமதியும் இல்லாமல் இந்த மண்டலங்களுக்குள் மரபுசாராத வான்வழி பொருட்களை பறக்கவிடுவது கண்டுபிடிக்கப்பட்டால் அவை பறிமுதல் செய்யப்படும். இந்த உத்தரவுகளை மீறுவதாக கண்டறியப்பட்ட ஆபரேட்டர் மீது இந்திய தண்டனைச் சட்ட விதிகளின்கீழ் அபராதம் மற்றும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இது தொடர்பாக பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள உத்தரவில், எந்த ஒரு ஆபரேட்டர் அல்லது நிறுவனமும் ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்துவதற்கு, உள்துறை அமைச்சகத்தால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, விமான போக்குவரத்து துறை அமைச்சகத்தின் இயக்குனர் ஜெனரலிடம் முறையாக அனுமதி பெற வேண்டும். அவ்வாறு அனுமதி பெற்ற ஒப்புதல் கடிதத்தை, ஆளில்லா விமானத்தை பறக்கவிடுவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பாக இணையதளம் மூலம் முறைப்படி தலைமை அலுவலகத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

Next Story