வருகிற 31-ந்தேதி வரை அவகாசம்: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்குடன், ஆதார் எண் இணைப்பு கட்டாயம்


வருகிற 31-ந்தேதி வரை அவகாசம்: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்குடன், ஆதார் எண் இணைப்பு கட்டாயம்
x
தினத்தந்தி 19 Aug 2021 7:50 PM GMT (Updated: 19 Aug 2021 7:50 PM GMT)

வருகிற 31-ந்தேதி வரை அவகாசம்: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்குடன், ஆதார் எண் இணைப்பு கட்டாயம் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் அறிவிப்பு.

சென்னை,

மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

மத்திய அரசின் சமூக பாதுகாப்புச்சட்டம், பிரிவு 142-ன்படி, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் தங்களுடைய வருங்கால வைப்பு நிதி கணக்கில் இருந்து பணம் எடுத்தல், ஓய்வூதியம் பெறுதல், காப்பீட்டு பலன்களை பெற, ஆதார் எண்ணை, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்குடன் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, நிறுவன உரிமையாளர்கள் தங்களுடைய ஊழியர்களின் ஆதார் எண்ணை, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்குடன் கட்டாயம் இணைக்க வேண்டும். இந்த இணைப்பை மேற்கொள்ள வருங்கால வைப்பு நிதி அலுவலகம் வருகிற 31-ந்தேதி வரை அவகாசம் வழங்கியிருக்கிறது.

இதன் மூலம் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்கள் தங்களுக்கு பண உதவி தேவைப்படும் போது, அவர்களே எளிதாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் சேவையை எளிதாக பயன்படுத்தி கொள்ள முடியும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story