தமிழகத்தில் அரசு வேலைக்காக 70 லட்சம் பேர் காத்திருப்பு


தமிழகத்தில் அரசு வேலைக்காக 70 லட்சம் பேர் காத்திருப்பு
x
தினத்தந்தி 19 Aug 2021 8:19 PM GMT (Updated: 19 Aug 2021 8:19 PM GMT)

தமிழகத்தில் கடந்த ஜூலை மாத நிலவரப்படி, வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, அரசு வேலைக்காக காத்திருப்பவர்கள் பற்றிய தகவலை வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை வெளியிட்டு உள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கடந்த ஜூலை மாத நிலவரப்படி, வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, அரசு வேலைக்காக காத்திருப்பவர்கள் பற்றிய தகவலை வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை வெளியிட்டு உள்ளது. அரசு வேலைக்காக 70 லட்சத்து 30 ஆயிரத்து 345 பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து காத்திருக்கிறார்கள். அதில், 32 லட்சத்து 93 ஆயிரத்து 401 பேர் ஆண்கள், 37 லட்சத்து 36 ஆயிரத்து 687 பேர் பெண்கள், 257 பேர் மூன்றாம் பாலினத்தவர்.

காத்திருப்போரில் 18 முதல் 23 வயதுக்கு உட்பட்ட 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் உள்ளனர். 24 முதல் 35 வயது வரையுள்ளவர்கள் 26 லட்சத்து 27 ஆயிரத்து 948 பேர், 36 முதல் 57 வயது வரை உள்ளவர்கள் 12 லட்சத்து 77 ஆயிரத்து 839 பேர், 58 வயதிற்கு மேற்பட்டவர்கள் 11 ஆயிரத்து 213 பேர் உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.மாற்றுத்திறனாளிகள் மொத்தம் 1 லட்சத்து 37 ஆயிரத்து 77 பேர் பதிவு செய்து காத்திருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Next Story