மாநில செய்திகள்

மேகதாதுவில் ஒரு செங்கல் கூட வைக்க விட மாட்டோம் - பிரேமலதா விஜயகாந்த் + "||" + We will not let a single brick be placed in Megha Dadu - Premalatha Vijayakand

மேகதாதுவில் ஒரு செங்கல் கூட வைக்க விட மாட்டோம் - பிரேமலதா விஜயகாந்த்

மேகதாதுவில் ஒரு செங்கல் கூட வைக்க விட மாட்டோம் - பிரேமலதா விஜயகாந்த்
மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிராக கர்நாடக அரசைக் கண்டித்து தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கிருஷ்ணகிரி,

கர்நாடகாவில் மேகதாதுவில் அணை கட்ட அம்மாநில அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. கர்நாடகா அரசின் இந்த முடிவிற்கு, தமிழக அரசு சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிருஷ்ணகிரியில் ராம்நகர் பகுதியில், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 300-க்கும் மேற்பட்டோர் தேமுதிக தொண்டர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னதாக, பிரேமலதா அவர்கள் 1 கி.மீ தூரம் டிராக்டர் ஓட்டி வந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கர்நாடக அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. 

பின்னர் பிரேமலதா விஜயகாந்த் கூறுகையில், 

தமிழ்நாடு ஏற்கனவே வறண்ட பூமியாக உள்ளது. மேகதாதுவில் அணை கட்டினால் தமிழ்நாடு பாலைவனம் ஆகும். தஞ்சைக்கு நீர் வரவில்லை என்றால் விவசாயம் கேள்விக்குறியாகும்.

தமிழ்நாட்டின் சார்பில் எச்சரிக்கிறோம். ஓசூர் எல்லைவரை வந்துவிட்டோம், பெரும்படை திரட்டி பெங்களூக்குள் நுழைய முடியும், நமக்குள் பிரிவினை வேண்டாம் என தமிழக விவசாயிகள் சார்பில் கூறிக்கொள்கிறேன். தமிழ்நாடு மக்கள் காந்தியாக இருக்க வேண்டுமா, சுபாஷ் சந்திரபோசாக இருக்க வேண்டுமா என கர்நாடகா முடிவு செய்ய வேண்டும் .

மேகதாதுவில் ஒரு செங்கல் கூட வைக்க விட மாட்டோம். கர்நாடக தமிழக மக்கள் இடையே பிரிவினை இல்லை; ஆகவே தண்ணீரிலும் பிரிவினை வேண்டாம். மத்தியிலும், கர்நாடகாவிலும் பாஜக ஆட்சி நடக்கிறது. ஆகவே மத்திய அரசு கர்நாடக அரசிடம் பேசி கர்நாடக அணை திட்டத்தை கை விட வேண்டும் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. மேகதாது திட்டத்தை தமிழக அரசு தேவையின்றி எதிர்க்கிறது - மந்திரி கோவிந்த் கார்ஜோள்
மேகதாது திட்டத்தை தமிழக அரசு தேவையின்றி எதிர்ப்பதாக மந்திரி கோவிந்த் கார்ஜோள் தெரிவித்துள்ளார்.
2. மேகதாது திட்டத்தில் மத்திய அரசு நியாயத்தின் பக்கம் நிற்க வேண்டும்: சித்தராமையா
மேகதாது திட்டத்தில் மத்திய அரசு நியாயத்தின் பக்கம் நிற்க வேண்டும் என்று சித்தராமையா கூறியுள்ளார்.
3. மேகதாது திட்டத்திற்கு விரைவாக அனுமதி வழங்க கோரி கர்நாடக கவர்னரிடம் குமாரசாமி கடிதம்
ஜனதா தளம் (எஸ்) கட்சி சார்பில் மேகதாது திட்டத்திற்கு விரைவாக அனுமதி வழங்க கோரி கவர்னரிடம் குமாரசாமி கடிதம் வழங்கினார்.
4. மேகதாது திட்ட விஷயத்தில் அனைவரின் கருத்தையும் கேட்க வேண்டும்: எடியூரப்பாவுக்கு குமாரசாமி வலியுறுத்தல்
மேகதாது திட்ட விஷயத்தில் அனைவரின் கருத்தையும் கேட்க வேண்டும் என்று முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு குமாரசாமி வலியுறுத்தியுள்ளார்.
5. மேகதாது திட்டத்தால் தமிழகத்திற்கான காவிரி நீர் குறைக்கப்படாது - கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர்
மேகதாது திட்டத்தால் தமிழகத்திற்கான காவிரி நீர் குறைக்கப்படாது என கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் தெரிவித்துள்ளார்.