மாநில செய்திகள்

அரசு ஆஸ்பத்திரியில் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு பிரசவம் அழகான பெண் குழந்தை பிறந்தது + "||" + Female IAS officer at government hospital The officer gave birth to a beautiful baby girl

அரசு ஆஸ்பத்திரியில் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு பிரசவம் அழகான பெண் குழந்தை பிறந்தது

அரசு ஆஸ்பத்திரியில் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு பிரசவம் அழகான பெண் குழந்தை பிறந்தது
அரசு ஆஸ்பத்திரியில் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு பிரசவம் அழகான பெண் குழந்தை பிறந்தது.
சேலம்,

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே கரடிப்பட்டியை சேர்ந்தவர் தர்மலாஸ்ரீ. ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர், தற்போது கேரள மாநிலம் ஆலப்புழாவில் சப்-கலெக்டராக பணியாற்றி வருகிறார். கர்ப்பமாக இருந்ததால் பெற்றோர் வீட்டில் இருந்தார். அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. பெற்றோர் மற்றும் உறவினர்கள் தனியார் ஆஸ்பத்திரியில் சேருமாறு அறிவுறுத்தினர். ஆனால் தர்மலாஸ்ரீ கடந்த 11-ந் தேதி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்திற்காக சேர்ந்தார். அங்கு அவர், பிரசவ வார்டில் மற்ற பெண்களுடன் தங்கி இருந்தார். சப்-கலெக்டர் தர்மலாஸ்ரீக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இதனை அறிந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து தாயையும், அவரது குழந்தையையும் பார்த்துவிட்டு சென்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. விமான நிலையத்தில் சல்மான்கானை தடுத்த அதிகாரிக்கு வெகுமதி
இந்தி திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் சல்மான்கான் டைகர் 3 படப்பிடிப்புக்காக ரஷியா செல்ல மும்பை விமான நிலையத்துக்கு வந்தார்.