மாநில செய்திகள்

சாகசத்தின் போது உடலில் தீப்பிடித்த கராத்தே வீரர் சாவு + "||" + Death of a karate player whose body caught fire during the adventure

சாகசத்தின் போது உடலில் தீப்பிடித்த கராத்தே வீரர் சாவு

சாகசத்தின் போது உடலில் தீப்பிடித்த கராத்தே வீரர் சாவு
சாகசத்தின் போது உடலில் தீப்பிடித்த கராத்தே வீரர் சாவு.
புதுக்கோட்டை,

புதுக்கோட்டையில் உள்ள மைதானத்தில் கடந்த 14-ந் தேதி கராத்தே வீரர்களுக்கு தகுதி பட்டை வழங்கும் நிகழ்ச்சி தனியார் பயிற்சி அமைப்பு மூலம் நடைபெற்றது. இதில் கராத்தே பயிற்சி பெற்ற வீரர்கள் பல்வேறு சாகசங்களை செய்தனர். புதுக்கோட்டை வடக்கு வீதியை சேர்ந்த கராத்தே வீரர் பாலாஜி (வயது 19) என்பவர் தனது கைகளில் சுற்றிய துணியில் தீ வைத்தபடி, ஓடுகளை உடைத்து சாகசம் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அவரது உடலில் தீ பற்றி மளமளவென எரிந்தது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு பாலாஜி பரிதாபமாக இறந்தார். பாலாஜி தனியார் கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. திருநின்றவூரில் மூதாட்டி மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து சாவு
திருநின்றவூரில் காலில் காயம் ஏற்பட்ட எலும்பு முறிவால் அவதியடைந்த மூதாட்டி உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து இறந்தார்.
2. மீன்பிடிக்க சென்ற போது பரிதாபம் நடுக்கடலில் மாரடைப்பு ஏற்பட்டு மீனவர் சாவு
மீன்பிடிக்க சென்ற போது பரிதாபம் நடுக்கடலில் மாரடைப்பு ஏற்பட்டு மீனவர் சாவு.
3. செய்யூர் அருகே கூட்ட நெரிசலில் வாக்குச்சாவடியில் மூதாட்டி மயங்கி விழுந்து சாவு
செய்யூர் அருகே கூட்ட நெரிசலில் வாக்குச்சாவடியில் மூதாட்டி மயங்கி விழுந்து சாவு.
4. தவறான சிகிச்சையால் 2-ம் வகுப்பு மாணவி சாவு
பொன்னேரியில் தவறான சிகிச்சையால் 2-ம் வகுப்பு மாணவி இறந்ததாக கூறி தனியார் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டது.
5. காசிமேட்டில் இருந்து மீன்பிடிக்க சென்ற போது நடுக்கடலில் மின்னல் தாக்கி மீனவர் சாவு
நடுக்கடலில் மீன்பிடிக்க சென்றபோது மின்னல் தாக்கியதில் வயர்லெஸ் கருவி வெடித்து சிதறி மீனவர் பலியானார்.