தி.மு.க. அரசின் வாக்குறுதிகளை நம்பி மக்கள்‌ ஏமாந்து நிற்கிறார்கள்‌ அண்ணாமலை அறிக்கை


தி.மு.க. அரசின் வாக்குறுதிகளை நம்பி மக்கள்‌ ஏமாந்து நிற்கிறார்கள்‌ அண்ணாமலை அறிக்கை
x
தினத்தந்தி 20 Aug 2021 10:05 PM GMT (Updated: 20 Aug 2021 10:05 PM GMT)

தி.மு.க. அரசின் வாக்குறுதிகளை நம்பி மக்கள்‌ ஏமாந்து நிற்கிறார்கள்‌ அண்ணாமலை அறிக்கை.

சென்னை,

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக பட்ஜெட்டின் கவலைக்குரிய அம்சம் என்றால், அது தமிழக அரசின் பெருகி வரும் கடன்தான். இனி என்ன செய்து தமிழக அரசாங்கம், இந்தக் கடனைத் திரும்பக் கட்டி முடிக்கப்போகிறது என்ற கேள்விக்கு தி.மு.க. அரசின் பட்ஜெட்டில் பதில் கிடைக்காமலே இருக்கிறது.

இந்த ஆட்சியின்‌ 100 நாள்‌ செயல்பாடுகளில் நீட் தேர்வு, நகைக்கடன் தள்ளுபடி, கல்விக் கடன் ரத்து, விவசாயக் கடன் ரத்து, இல்லத்தரசிகளுக்கு 1000 ரூபாய், டீசல் விலை என்று எல்லா வாக்குறுதிகளையும் நம்பி மக்கள்‌ ஏமாற்றம்‌ அடைந்து நிற்கிறார்கள்‌. 100 நாள் என்பது நாட்களின் குறியீடு தானே தவிர இதில் சிறப்பு என்ன இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story