வளிமண்டல மேலடுக்கு சுழற்சி: தமிழகம், புதுச்சேரியில் பரவலாக கனமழை


வளிமண்டல மேலடுக்கு சுழற்சி:  தமிழகம், புதுச்சேரியில் பரவலாக கனமழை
x
தினத்தந்தி 21 Aug 2021 2:55 AM GMT (Updated: 21 Aug 2021 4:31 AM GMT)

தென் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரியில் கனமழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி, செஞ்சி, கடலூர், நாமக்கல், விழுப்புரம், தூத்துக்குடி, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.

விருதுநகர் பகுதிகளிலும் ஒருமணி நேரம் மழை பெய்தது

சென்னையில் வில்லிவாக்கம் கோயம்பேடு ஆகிய பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

புதுச்சேரியில் முத்தியால்பேட்டை, ராஜ்பவன், நெல்லித்தோப்பு, உப்பளம் உள்ளிட்ட  பகுதிகளில் பரவலாக இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

சென்னை வானிலை மையம் வெளியிட்டு உள்ள தகவலில்

சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கடலூர், அரியலூர், டெல்டா மாவட்டங்கள், மற்றும் புதுச்சேரி, காரைக்காலின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 24ஆம் தேதி வரை தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Next Story