பழனி அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உடல் கருகி பலி...! கொலையா..?


பழனி அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உடல் கருகி பலி...! கொலையா..?
x
தினத்தந்தி 21 Aug 2021 3:13 AM GMT (Updated: 2021-08-21T22:49:51+05:30)

பழனி அருகே ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் எதிர்பாராமல் நடந்த விபத்தா அல்லது திட்டமிட்ட கொலை முயற்சியா என்பது குறித்து போலீசார் விசாரித்துவருகின்றனர்.

பழனி,

திண்டுக்கல் மாவட்டம் பழனி வத்தகவுண்டன் வலசுவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீயில் கருகி இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். முருகேசன், அவரது மனைவி வளர்மதி, அவர்களது குழந்தைகளான மகள் சிவரஞ்சனி, மகன் கார்த்தி ஆகியோரின் உடல்கள் மக்காச்சோள தட்டையில் எரிந்த நிலையில் கிடந்தன.

 விவசாயி முருகேசன் குடும்பத்துடன் கொல்லப்பட்டாரா அல்லது நான்கு பேரும் தற்கொலை செய்துகொண்டனரா அல்லது வேறு ஏதேனும் எதிர்பாராத விபத்தால் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதா என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

4 பேர் மர்ம மரணம் குறித்து திண்டுக்கல் சரக டிஐஜி விஜயகுமாரி சம்பவ இடத்தில் விசாரணை நடத்திவருகிறார். 


Next Story